சீன-ஆப்பிரிக்க அமைதி முன்னெடுப்பு முயற்சி... அதற்கு சாத்தியமே இல்லை: புடின் பதில்
ஆப்பிரிக்க மற்றும் சீன முன்னெடுப்புகள் உக்ரைனில் அமைதியை கொண்டு வருவதற்கான அடிப்படையாக இருக்கலாம் என்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா-ஆப்பிரிக்க உச்சி மாநாடு
ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் ஆப்பிரிக்க-ரஷ்யா இடையிலான 2 நாள் உச்சி மாநாடு நடைபெற்றது.
இதில் உக்ரைனில் அமைதியை நிலை நாட்டுவது தொடர்பாக ஆப்பிரிக்க எடுத்த முன்னெடுப்புகளுக்கு பதிலளித்து செய்தியாளர்களிடம் பேசிய ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்(Vladimir Putin), ஆப்பிரிக்க மற்றும் சீன முன்னெடுப்புகள் உக்ரைனில் அமைதியை கொண்டு வருவதற்கான அடிப்படையாக இருக்கலாம் என்றும் தெரிவித்தார்.
ஆனால் உக்ரைனுடனான அமைதி பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதை ரஷ்யா எப்போதும் மறுக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.
ரஷ்ய வீரர்கள் தாக்கப்படும் போது போர் நிறுத்தத்தை அறிவிக்க முடியாது
இத்தகைய முன்னெடுப்பு முயற்சி, என்னுடைய கருத்துப்படி, அமைதியை தேடிய செயல்முறைக்கான அடிப்படையாக இருக்கலாம்.
உதாரணமாக சீனாவின் முன்னெடுப்பை போன்று. இந்த அமைதி முன்னெடுப்புகளில் உள்ளது போல சில விதிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது, ஆனால் மற்ற சில விதிகளை, வழிமுறைகளை செயல்படுத்துவது கடினம் அல்லது சாத்தியமற்ற விஷயம் என புடின் குறிப்பிட்டார்.
"One of the points of the peace initiative on Ukraine is a ceasefire. But the Ukrainian Armed Forces are in offense, so the Russian Armed Forces can't cease the fire" - Putin speaks at a meeting with journalists to sum up the Russia-Africa summit.
— Anton Gerashchenko (@Gerashchenko_en) July 29, 2023
"And we never refused peace… pic.twitter.com/xisVzVMtHg
அவ்வாறு முன்னெடுப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ள விஷயங்களில் ஒன்றை உதாரணமாக கூறிய புடின், ரஷ்ய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வரும் போது ரஷ்யா போர் நிறுத்தத்தை அறிவிப்பது சாத்தியமற்றது என்று தெரிவித்தார்.
கடந்த ஆண்டு பிப்ரவரியில் போர் தொடங்கிய பிறகு, மேற்கொள்ளப்பட்ட அதிகாரப்பூர்வ மற்றும் அதிகாரப்பூர்வமற்ற 30 அமைதி பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |