“உட்காருங்கள், உட்காருங்கள்” ஆப்பிரிக்க நாட்டு தலைவரை இருக்கையில் அமர வைத்த புடின்: வைரல் வீடியோ
பிற நாட்டு தலைவர்கள் நின்று கொண்டு இருப்பதை பார்த்து தனது இருக்கையில் இருந்து எழும்ப முயன்ற ஆப்பிரிக்க நாட்டு ஜனாதிபதியை ரஷ்ய ஜனாதிபதி புடின் இருக்கையில் அமரும் படி கேட்டுக் கொண்டார்.
ரஷ்யா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையின் தொடர்ச்சியாக ஐ.நாவின் உணவு தானிய ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா வெளியேறியது.
இதனால் ஆப்பிரிக்க நாடுகள் உணவு பஞ்சத்தால் பாதிக்கப்படும் என்ற அச்சம் வெளிப்படுத்தப்பட்ட நிலையில், ஆப்பிரிக்க நாடுகளுக்கு தேவையான தானியங்களை வழங்க ரஷ்யா உதவும் என தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், ரஷ்யாவின் பீட்டர்ஸ்பெர்க் நகரில் ஆப்பிரிக்க நாட்டு தலைவர்கள் பங்கேற்ற ரஷ்யா-ஆப்பிரிக்கா இடையிலான இரண்டு நாள் உச்சி மாநாடு நடைபெற்றது.
இதில் ரஷ்ய ஜனாதிபதி புடின்(Russian President Vladimir Putin) ஆப்பிரிக்க நாட்டு தலைவரை இருக்கையில் அமர சொல்லி வேண்டிக் கொள்ளும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
இணையத்தில் வைரலாகும் வீடியோ
இந்த வீடியோவில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடனான பொது சந்திப்பிற்காக ஆப்பிரிக்க தலைவர்கள் குழுமி இருந்த நிலையில் கொமொரோஸின் நாட்டு ஜனாதிபதி அசாலி அஸெளமானி(Azali Assoumani) யாரும் அமர்வதற்கு முன்பு தன்னுடைய இருக்கையில் அமர்ந்து கொண்டார்.
பின்பு யாரும் அமரவில்லை என்பதை உணர்ந்து இருக்கையில் இருந்து எழுந்திரிக்க முயற்சித்த போது ரஷ்ய ஜனாதிபதி “அமருங்கள், அமருங்கள்” என வேண்டிக் கொண்டு இருக்கையில் அவரை அமர வைத்தார்.
"Sit-sit-sit!": Putin did not allow the president of Comoros to stand up
— Spriter Team (@SpriterTeam) July 27, 2023
The leader of this African country sat down before everyone at the table, and when he noticed that no one had sat down yet, he tried to get up. However, President Putin did not allow him to stand up and… pic.twitter.com/zCKGuuKyXC
அவர் மீண்டும் மீண்டும் இருக்கையில் இருந்து எழுந்திரிக்க முயன்றும் ரஷ்ய ஜனாதிபதி புடின் அவரை இருக்கையில் அமர்ந்து இருக்குமாறு வேண்டி கேட்டுக் கொண்டார்.
இந்த காட்சிகள் இணையதளத்தில் வேகமாக பரவி அனைவராலும் பார்க்கப்பட்டு வருகிறது, ட்விட்டரில் மட்டும் இந்த வீடியோ 387k பார்வைகளை பெற்றுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |