வாக்னர் கூலிப்படை தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் தற்போதைய நிலை: வெளியாகியுள்ள புதிய புகைப்படம்
வாக்னர் கூலிப்படை தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் மத்திய ஆப்பிரிக்க குடியரசு பிரதிநிதியை சந்தித்தார்.
பெலாரஸூக்கு அனுப்பப்பட்ட வாக்னர் கூலிப்படை
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையில் ரஷ்யாவின் சார்பில் வாக்னர் கூலிப்படையும் களமிறக்கப்பட்டது.
போர் தொடங்கி 15 மாதங்கள் ஆகியிருந்த நிலையில், ரஷ்ய ராணுவ வீரர்களால் வாக்னர் கூலிப்படை தாக்கப்படுவதாக குற்றம்சாட்டி வாக்னர் கூலிப்படை மாஸ்கோவிற்கு படையெடுத்தது.
இதையடுத்து வாக்னர் கூலிப்படை கலைக்கப்பட்டு அதன் வீரர்கள் பெலாரஸ் நாட்டிற்கு நாடு கடத்தப்பட்டனர்.
Putin and Prigozhin are preparing for war with each other, while the Russian Federation is disintegrating into mafia clans. Interview with Yakovenko
— Lew Anno Suport #Ukraine 24/2-22 (@anno1540) July 21, 2023
The owner of "Wagner" PvC Yevgeny Prigozhin, who is in Belarus with part of his "army", made a statement. The terrorist called… pic.twitter.com/iHYgZ38GiW
அத்துடன் வாக்னர் கூலிப்படை தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும், அவரும் பெலாரஸ் நாட்டுக்கு நாடு கடத்தப்பட்டு இருக்கலாம் என்றும் செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன.
மேலும் அவ்வப்போது அவரது புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளிவந்து கொண்டிருந்தது. இதனால் அவரது நிலை குறித்த குழப்பம் நீடித்து கொண்டு வந்தது.
மத்திய ஆப்பிரிக்க பிரதிநிதி உடன் சந்திப்பு
இந்நிலையில் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள மாளிகையில் வாக்னர் கூலிப்படை தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் மத்திய ஆப்பிரிக்க குடியரசு பிரதிநிதிகளை சந்தித்தார்.
Head of Wagner PMC Yevgeny #Prigozhin met in St. Petersburg with representatives of the #CentralAfricanRepublic as part of the Russia-Africa Forum. pic.twitter.com/YBFR89RQU1
— NEXTA (@nexta_tv) July 27, 2023
ரஷ்ய-ஆப்பிரிக்க மன்றத்தின் ஒற்றை பகுதியாக மத்திய ஆப்பிரிக்க குடியரசு பிரதிநிதிகளை வாக்னர் கூலிப்படை தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் சந்தித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில் வாக்னர் கூலிப்படை தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் மத்திய ஆப்பிரிக்க குடியரசு பிரதிநிதியுடன் கை குலுக்கி கொள்ளும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி பரவி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |