கருங்கடலில் பொதுமக்கள் படகுகளை அச்சுறுத்தும் ரஷ்யா; உக்ரைன் குற்றச்சாட்டு
கருங்கடலில் பொதுமக்கள் கப்பல்களை ரஷ்யா அச்சுறுத்திவருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.
சர்வதேச சமூகம் கண்டிக்க வேண்டும்
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் (Volodymyr Zelenskyy) தலைமை அதிகாரி Andriy Yermak ரஷ்யா மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். கருங்கடலில் பொதுமக்கள் கப்பல்களை ரஷ்யா அச்சுறுத்திவருவதாக அவர் கூறினார். பயங்கரவாதிகளின் இத்தகைய செயல்களை சர்வதேச சமூகம் கண்டிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
சர்வதேச கடல்சார் சட்டத்தின் அனைத்து விதிமுறைகளையும் மீறி ரஷ்ய போர்க்கப்பல்கள் கருங்கடலில் பொதுமக்களை அச்சுறுத்துவதாக அவர் ஒரு Telegram செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
Reuters
ரஷ்யா விடுத்த எச்சரிக்கை
கடந்த வாரம், கருங்கடல் வழியாக உக்ரைன் தானியங்களை பாதுகாப்பாக ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும் ஐ.நா மற்றும் துருக்கியின் தரகு ஒப்பந்தத்தை ரஷ்யா முடிவுக்கு கொண்டு வந்தது.
அதுமட்டுமின்றி, உக்ரேனிய துறைமுகங்களுக்கு செல்லும் கப்பல்கள் ரஷ்ய ராணுவ இலக்குகளாக இருக்கலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
உக்ரைன் தரப்பில் வெளியான மற்றொரு அறிக்கையில், உக்ரைன் துறைமுகத்திற்கு அருகே ஒரு சிவிலியன் கப்பலுக்கு எதிராக ரஷ்ய போர்க்கப்பல் விடுத்த அச்சுறுத்தலை இடைமறித்ததாக உக்ரைனின் எல்லைக் காவலர் சேவை கூறியது. கப்பலின் பெயர் மற்றும் துறைமுகம் பற்றிய தகவலை உக்ரைன் வெளியிடப்படவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Russia threatens civilian vessels in Black Sea, Russia threatening civilian boats, Ukraine, Russia, Ukraine Russia War, Volodymyr Zelenskyy, Vladimir Putin