பிரான்சில் அடுத்த மாதம் அமுலில் வரும் புதிய கட்டுப்பாடு? மீறினால் 45,000 யூரோ அபராதம்-ஒருவருடம் சிறை!
பிரான்சில் உணவகங்கள் மற்றும் காபேக்களுக்கான புதிய கட்டுப்பாடுகள் விதிக்கும் நிபந்தனை நிறைவேற்றும் மசோதா பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் இன்னும் முழுமையாக கட்டுக்குள் வராத காரணத்தினால், பிரான்ஸ் அரசு அதன் நான்காம் அலையில் இருந்து தப்பிப்பதற்கு தொடர்ந்து கொரோனா கட்டுப்பாடுகளை முழுமையாக நீக்கமால், வைத்துள்ளது. மக்களை தடுப்பூசி போட்டுக் கொள்ளும் படி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இதனால், நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான், மக்கள் தங்களுக்கான தடுப்பூசிகளை விரைவில் பெற்றுக்கொள்ள அழுத்தம் கொடுக்கும் முயற்சியில், புதிய கட்டுப்பாடுகள் ஜூலை 21-ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என கூறியிருந்தார்.
அதுமட்டுமின்றி உணவங்கள், காபேக்களில் pass sanitaire கட்டாயம் என்று தெரிவித்தார்.
இந்நிலையில், உணவகங்கள் மற்றும் காபேக்களுக்கான புதிய கட்டுப்பாடுகள் விதிக்கும் நிபந்தனை நிறைவேற்றும் மசோதா பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டில் இருக்கும் உணவங்கள், காபேக்களுக்கு வரும் மக்களிடம், சுகாதார பாஸ், அதாவது pass sanitaire சான்றிதழ் கட்டாயம் உள்ளதா என்பதை அந்த கடையில் இருக்கும் ஊழியர்கள் பரிசோதிக்க வேண்டும்.
இந்த சான்றிதழ் உள்ளவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும், அப்படி இதை மீறி செயல்பட்டால், 45,000 யூரோ அபராதமாக விதிக்கப்படுவதுடன், ஒரு வருட சிறை தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்ற புதிய மசோதா உருவாகியுள்ளது.
இந்த மசோதா, வரும் ஜூலை 19-ஆம் திகதி இடம்பெற உள்ள பாதுகாப்பு கவுன்சில் அமர்வில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
அதன், பின் இது குறித்து ஜூலை 21-ஆம் திகதி பாராளுமன்றத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டு, அதைத் தொடர்ந்து வரும் ஆக்ஸ்ட் முதல் இந்த புதிய சட்டம் அமுலுக்கு வர அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் இந்த விஷயத்தில், உணவகங்கள் மற்றும் காபேக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும் படி கூறப்பட்டுள்ளது. இந்த நிபந்தனை இவற்றிற்கு மட்டுமின்றி, சினிமா தியேட்டர்கள், நாடக அரங்குகள் போன்ற இடங்களுக்கும் பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது.