பிரான்சின் புதிய பிரதமர் திடீர் ராஜினாமா: பிரான்ஸ் அரசியலில் பெரும் பரபரப்பு
பிரான்சின் புதிய பிரதமர், பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு மாதம் கூட முழுமையாக முடிவடையாத நிலையில் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ள விடயம் பிரான்ஸ் அரசியலில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
பிரான்ஸ் பிரதமர் திடீர் ராஜினாமா
சென்ற மாதம், அதாவது, செப்டம்பர் மாதம் 9ஆம் திகதி, பிரான்சில் புதிய பிரதமராக செபாஸ்டியன் (Sebastien Lecornu) என்பவரை நியமித்தார் பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை, அமைச்சரவையில் சில மாற்றங்களைச் செய்தார் பிரதமர் செபாஸ்டியன்.
புதிய அமைச்சரவை இன்று மதியம் கூட இருந்த நிலையில்,திடீரென தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் செபாஸ்டியன்.
செபாஸ்டியனின் ராஜினாமாவைத் தொடர்ந்து, பிரான்ஸ் அரசியலில் பெரும் குழப்பம் உருவாகியுள்ளது.
பிரான்சில் இரண்டு ஆண்டுகளில் ஐந்தாவது பிரதமராக நியமிக்கப்பட்டவர் செபாஸ்டியன் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |