பிரான்ஸில் வெப்ப அலையின் தாக்கம்: குறைந்தது 7 பேர் உயிரிழப்பு
ஐரோப்பாவை வாட்டி வரும் வெப்ப அலையால் பிரான்ஸில் இதுவரை 7 பேர் வரை உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸில் வெப்ப அலையின் தாக்கம்
ஐரோப்பா முழுவதும் மிக கடுமையான வெப்ப அலையை எதிர்கொண்டு வரும் நிலையில், பிரான்ஸில் நிலவிய கடும் வெப்பம் காரணமாக இதுவரை குறைந்தது 7 பேர் வரை உயிரிழந்து இருப்பதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
வெப்பத்தில் இருந்து தப்பிப்பதற்காக ஏரிகள், ஆறுகள் மற்றும் கடற்கரைக்கு சென்ற 5 பேர் வரை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

வெப்ப அலைகளால் ஏற்பட்ட வெப்பம் தாங்க முடியாமல் மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். பாரிஸ் நடைபெற்ற ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்ட 53 வயது நபர் வெப்பம் தாங்க முடியாமல் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
லியோன் நகரை சேர்ந்த பெண் ஒருவர் அதிகப்படியான வெப்பத்தில் பாதிக்கப்பட்டு(Heatstroke) உயிரிழந்துள்ளார்.

பிரித்தானியாவில் கடும் வெப்பம்
வரலாறு காணாத வகையில் வெப்ப அலைகள் பிரித்தானியாவிலும் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 26ம் திகதி(செவ்வாய்க்கிழமை) வெப்பநிலை புதிய சாதனை படைத்துள்ளது. அதாவது கடந்த 100 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக முந்தைய அதிக வெப்ப அளவை முறியடித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |