புலம்பெயர்வோரை தடுக்க என்னால் முடியும்: பிரான்சின் அடுத்த ஜனாதிபதி உறுதி
பிரான்சின் அடுத்த ஜனாதிபதி ஆவார் என எதிர்பார்க்கப்படும் ஒருவர், ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரைத் தடுத்து நிறுத்த தன்னால் முடியும் என்று கூறியுள்ளார்.
புலம்பெயர்வோரை தடுக்க என்னால் முடியும்
பிரான்சின் National Rally கட்சியின் தலைவரான ஜோர்டன் பார்டெல்லா, தான் பிரான்ஸ் ஜனாதிபதியானால், தன்னால் பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரை தடுத்து நிறுத்த முடியும் என்று கூறியுள்ளார்.

அத்துடன், கெய்ர் ஸ்டார்மரின் ’one-in-one-out’ ஒப்பந்தம் எல்லாம் வேலைக்கு ஆகாது என்று கூறியுள்ள ஜோர்டன், புலம்பெயர்வோரைத் தடுத்து நிறுத்துவது எப்படி என்பதற்கான திட்டமும் தன்னிடம் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பிரான்சின் புலம்பெயர்தல் கொள்கையை முற்றிலும் மாற்றி அமைக்க விரும்பும் ஜோர்டன், புகலிடக்கோரிக்கை பரிசீலனைகளை வேறு நாடுகளிலுள்ள தூதரகங்களுக்கு மாற்றுதல், வெளிநாட்டுக் குற்றவாளிகளை முறைப்படி வெளியேற்றுதல் ஆகியவை தனது திட்டங்கள் என்று கூறியுள்ளார்.

அத்துடன், குறைந்த வாடகைக்கு அரசு கொடுக்கும் வீடுகள் முதலான உதவிகளை வழங்குவதில் பிரான்ஸ் குடிமக்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படும் என்றும், புலம்பெயர்வோரை ஈர்க்காத ஒரு நாடாக பிரான்சை மாற்றுவேன் என்றும் கூறியுள்ளார் ஜோர்டன்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |