பற்றியெரியும் பிரான்ஸ்: வாகனத்தை தடுத்து நிறுத்த பொலிஸ் துப்பாக்கிகளை பயன்படுத்துவது ஏன்?
பிரான்ஸ் நாட்டில் வாகனத்தை தடுத்து நிறுத்த பொலிஸார் எதற்காக துப்பாக்கியைப் பயன்படுத்துகின்றனர் என்பதை எங்கே பார்க்கலாம்.
பிரான்சில் 17 வயது சிறுவனான நஹெல் பொலிஸாரால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து நாடே கலவர பூமியாக மாறியுள்ளது. நாளுக்கு நாள் போராட்டங்கள் தீவிரமானதால் எங்கும் பதற்றம் நீடிக்கிறது. கலவரத்தில் ஈடுபட்டவர்களில் இதுவரை 1100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் இத்தனை பெரிதாக வெடித்திருந்தாலும், இதுபோல் வாகனத்தை தடுத்து நிறுத்தும்போது பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்படுவது இது முதல்முறையல்ல.
இந்த ஆண்டு மட்டுமே இது மூன்றாவது சம்பவம் என்றும் கடந்த ஆண்டு மட்டும் இதுபோல் 13 பேர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும் செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றனர்.
Traffic Stop - வாகனத்தை தடுத்து நிறுத்துவது என்றால் என்ன?
சாலையில் அத்துமீறிச் செல்லும் அல்லது சந்தேகத்துக்கு இடமான வாகனங்களை பொலிஸார் தடுத்து நிறுத்துவார்கள். அவ்வாறு நிறுத்தும் நேரத்தில், அந்த வாகனத்தையும் அதை ஓட்டும் நபரையும் காவல்துறையினர் தற்காலிகமாக தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவார்கள். இதுவே Traffic Stop எனப்படுகிறது.
துப்பாக்கியை பயன்படுத்த அனுமதிக்கும் சட்டம்
பிரான்சில் ஆபத்தான சூழ்நிலைகளில் பொலிஸார் துப்பாக்கியை பயன்படுத்தலாம். இது 2017-ஆம் ஆண்டுக்குப் பிறகு சட்டத்தில் ஏற்பட்ட மாற்றத்தினால் அனுமதிக்கப்படுகிறது.
வாகன ஓட்டிகள் பொலிஸாரின் ஆணையை மதிக்காமல் வாகனத்தை நிறுத்தாமல் சென்றாலோ அல்லது யாருக்கேனும் ஆபத்து விளைவிப்பது போன்று தோன்றினாலோ துப்பாக்கிச் சூடு நடத்த இந்த சட்டம் அனுமதிக்கிறது.
EPA
பொலிஸார் துப்பாக்கிகளை பயன்படுத்த அனுமதித்தது ஏன்?
பிரான்சின் புறநகர் பகுதிகளில் பதற்றநிலை ஏற்படுவது புதியதல்ல. அங்கு குற்றவியல் சம்பவங்கள் நடைபெறுவது வாடிக்கையாகிவிட்டது. அங்கு வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக காவல்துறை தெரிவிக்கிறது.
2016-ல் பாரிஸ் புறநகர் பகுதியில் இளைஞர்கள் சிலர் பொலிஸ் அதிகாரி ஒருவரின் ரோந்து வாகனம் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். இதில் அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு கோமாவிற்கு சென்றுவிட்டார்.
EPA
அப்போது பொலிஸ் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு இதுகுறித்து தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுதத்தனர்.
இதுபோல் பொலிஸாருக்கு பாதுகாப்பை வழங்கும் விதமாக, அப்போதைய உள்துறை அமைச்சர், பெர்னாட் கசெனோவ் கடமையில் இருக்கும் பொலிஸ் அதிகாரிகள் ஆயுதங்கள் பயன்படுத்தச் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படும் என தெரிவித்தார். அதன்பிறகே, 2017-ல் மார்ச் மாதம், சட்டப் பிரிவு 435-1ல் மாற்றம் கொண்டு வரப்பட்டது.
சிறுவன் நஹெலுக்கு நடந்தது என்ன?
கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை, இதேபோல் அல்ஜீரியாவை பூர்வீகமாக கொண்ட நஹெல் (17) வாகனத்தை தடுத்து நிறுத்தியபோது பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இரண்டு பொலிஸ் அதிகாரிகளின் ஆணையை மீறி நஹெல் காரை நிறுத்தாமல் சென்றதாகவும், அவர் பலமுறை போக்குவரத்து விதிகளை மீறியதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குற்றம் சுமத்தப்பட்ட அதிகாரி தரப்பு வழக்கறிஞர், அந்த அதிகாரி சட்டத்திற்கு உட்பட்டே துப்பாக்கியை பயன்படுத்தியதாகவும் அவர் சட்டத்திற்கு புறம்பாக எதையும் செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
France on Fire, France Violence, France Police, Nahel France Shooting
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |