இலவச கடைகளைத் திறக்க பிரான்ஸ் திட்டம்: சோதனை முயற்சி துவங்கியது...
இலவச கடைகளைத் திறப்பது தொடர்பில் பிரான்ஸ் சோதனை முயற்சி ஒன்றைத் துவக்க உள்ளது.
எந்தப் பொருளையும் வீணாக்கக்கூடாது என்னும் கொள்கையின்படி இயங்கும் இந்தக் கடைகள், கழிவு மேலாண்மை அமைப்பு ஒன்றினால் நடத்தப்பட உள்ளன.
இலவச கடைகளைத் திறப்பது தொடர்பில் பிரான்ஸ் சோதனை முயற்சி ஒன்றைத் துவக்க உள்ளது. வழக்கமான பல்பொருள் அங்காடிகளைப் போலவே வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கடைகளின் கொள்கை பண்டமாற்று மற்றும் மறுசுழற்சி என்பதாகும்.
இந்தக் கடைகளில், மக்கள் தங்களிடம் உள்ள பழைய பொருட்களைக் கொடுத்துவிட்டு, அதற்கு பதிலாக புதிய பொருட்களை பெற்றுச் செல்லலாம், அதுவும் இலவசமாக...
பெரிய அளவில் Smicval market’ என்று அழைக்கப்படும் இந்தக் கடைகளை திறக்க பிரான்ஸ் திட்டமிட்டுவரும் நிலையில், தற்போது ஏழு சிறிய கடைகள் முதலில் திறக்கப்பட்டுள்ளன. மூன்று பெரிய கடைகளைத் திறக்கும் திட்டமும் உள்ளது.
உணவுப் பொருட்கள் மட்டும் இங்கு கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.