உக்ரைன் கனிம வளங்களைப் பயன்படுத்த பிரான்ஸ் பேச்சுவார்த்தை
உக்ரைனின் கனிம வளங்களை இராணுவ தேவைக்காக பெற பிரான்ஸ் அரசும் உக்ரைன் அரசும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன.
இது குறித்து பிரான்ஸ் பாதுகாப்புத் துறை அமைச்சர் செபாஸ்டியன் லெகோர்னு (Sébastien Lecornu) பிப்ரவரி 27 அன்று அறிவித்தார்.
"பிரான்ஸின் தேவைகளுக்காக இந்த விவகாரத்தில் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம்," என அவர் Franceinfo ஊடகத்திடம் கூறினார்.
இந்த பேச்சுவார்த்தை 2023 அக்டோபரில் தொடங்கப்பட்டது மற்றும் இரு நாடுகளின் பாதுகாப்பு துறைகளால் முன்னெடுக்கப்பட்டது.
அமெரிக்கா உக்ரைனுக்கு உதவியளித்து, அதற்குப் பதிலாக கனிம வளங்களை பெறுவதைப் போன்று, பிரான்ஸ் எந்த கைமாறையும் (payback) கோரவில்லை என லெகோர்னு குறிப்பிட்டார்.
ஆனால், அடுத்த 30 அல்லது 40 ஆண்டுகளுக்கு பிரான்ஸின் பாதுகாப்பு தொழில் முக்கியமான மூலப்பொருட்கள் தேவைப்படும் என அவர் தெரிவித்தார்.
எந்த கனிமங்கள்?
லெகோர்னு உக்ரைனில் இருந்து எந்த கனிமங்களைப் பெற விரும்புகின்றார் என்பதை வெளிப்படுத்தவில்லை. ஆனால், ஜெலன்ஸ்கி கடந்த ஆண்டே கனிம வளங்களை அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து பயன்படுத்தும் திட்டத்தை முன்வைத்திருந்தார்.
இந்நிலையில், ஜெலன்ஸ்கி பிப்ரவரி 28 அன்று வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புடன் கனிம வள ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |