பிட்காயினை தேசிய சொத்தாக மாற்ற பிரான்ஸ் திட்டம்
பிரான்ஸ், பிட்காயினை தேசிய சொத்தாக மாற்றும் நோக்கில் புதிய சட்ட முன்மொழிவை அறிவித்துள்ளது.
UDR கட்சி தலைவர் எரிக் சியோட்டி தலைமையில், இந்த சட்டம் 2025 அக்டோபர் 28-ஆம் திகதி பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இது, பிட்காயினை “டிஜிட்டல் தங்கம்” எனக் கருதி, நாட்டின் நிதி இறையாண்மையை வலுப்படுத்தும் முயற்சியாகும்.
இந்த திட்டத்தின் முக்கிய அம்சமாக, “பிட்காயின் ஸ்ட்ராடஜிக் ரிசர்வ்” என்ற தேசிய களஞ்சியத்தை உருவாக்கும் யோசனை உள்ளது.

இதன் மூலம், 7 முதல் 8 ஆண்டுகளில் மொத்த பிட்காயினில் 2 சதவீதம் (சுமார் 4.2 லட்சம் பிட்காயின்) பெறப்படும். இந்த களஞ்சியத்தை நிர்வகிக்க, பொது நிர்வாக அமைப்பை உருவாக்கும் திட்டமும் உள்ளது.
நிதி ஆதாரமாக, அணு மற்றும் நீர்மின் ஆற்றலை பயன்படுத்தி அரசு சார்பில் பிட்காயின் மைனிங் செய்யப்படும்.
மைனர்களுக்கான வரி சலுகைகள், பறிமுதல் செய்யப்பட்ட கிரிப்டோவை வைத்திருத்தல், Livret A போன்ற சேமிப்பு திட்டங்களின் ஒரு பகுதியை பிட்காயின் வாங்க பயன்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும்.
மேலும், சில வரிகளை பிட்காயினில் செலுத்த அனுமதிக்கும் யோசனையும் உள்ளது.
200 யூரோவிற்கும் குறைவான பரிவர்த்தனைகள் வரிவிலக்காகும். யூரோ ஸ்டேபிள்காயின்கள் வழியாக தினசரி பரிவர்த்தனைகள் செய்ய அனுமதி வழங்கப்படும்.
இந்த சட்டம், பிரான்சை கிரிப்டோ பொருளாதாரத்தில் முன்னோடியாக மாற்றும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. ஆனால், UDR கட்சிக்கு 577 இடங்களில் 16 இடங்கள் மட்டுமே இருப்பதால், சட்டம் நிறைவேறுவது சவாலாக இருக்கலாம்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |