முதியவர்கள் வாகனம் ஓட்ட கட்டுப்பாடுகள்... சட்டமாக்க திட்டமிடும் பிரான்ஸ்
வாகனம் ஓட்டும் முதியவர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்வதை சட்டமாக்க பிரான்ஸ் திட்டமிட்டுவருகிறது.
முதியவர்கள் வாகனம் ஓட்ட கட்டுப்பாடுகள்...
சாலை விபத்துக்களை தடுக்கும் நோக்கில் முதியவர்கள் வாகனம் ஓட்டுவதற்கு சில கட்டுப்பாடுகளை விதிக்கும் வகையில் மசோதா ஒன்றில் 85 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளார்கள்.
அதாவது, வாகனம் ஓட்டுவோர், 15 ஆண்டுகளுக்கு ஒரு முறை தங்கள் ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்கவேண்டும். அப்போது, அவர்கள் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படவேண்டும்.
முதியவர்களைப் பொருத்தவரை, 70 வயதுக்கு மேற்பட்டவர்கள், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவேண்டும் என்கிறது அந்த மசோதா.
விடயம் என்னவென்றால், பிரான்சைப் பொருத்தவரை 65 வயதும் அதற்கு மேலும் உள்ள வாகன ஓட்டிகள், குறைந்த அளவிலேயே மரணத்தை ஏற்படுத்தும் வகையிலான விபத்தை ஏற்படுத்தியுள்ளார்கள்.
18 முதல் 24 வயது வரை உள்ள வாகன ஓட்டிகளே மரணத்தை ஏற்படுத்தும் வகையிலான விபத்துக்களில் பாதியை ஏற்படுத்தியுள்ளார்கள் என்கின்றன தேசிய சாலை பாதுகாப்பு தரவுகள்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |