பிரான்ஸ் அரசு கவிழும் அபாயம்: பின்னணி
பிரான்ஸ் பிரதமர் மீண்டும் ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்கொள்ள இருப்பதையடுத்து, பிரான்ஸ் அரசு கவிழும் அபாயம் உருவாகியுள்ளது.
மீண்டும் ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானம்
பிரான்ஸ் அரசுக்கு சுமார் 3 ட்ரில்லியன் யூரோக்கள் அளவுக்கு கடன் உள்ளது. அரசை கடனிலிருந்து மீட்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க திட்டமிட்டுவருகிறார் பிரதமர் பிரான்சுவா பேய்ரூ (Francois Bayrou).
அரசின் கடனைக் குறைக்கும் வகையில், பணத்தை மிச்சப்படுத்துவதற்காக, இரண்டு அரசு விடுமுறைகளை குறைக்கும் திட்டம் ஒன்றை முன்வைத்தார் பேய்ரூ.
ஆனால், அது பொதுமக்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தைக் கலைக்கவேண்டும் என வலியுறுத்திவருகின்றன.
இதற்கிடையில், சில அமைப்புகள் பட்ஜெட் தொடர்பில் பிரதமர் முன்வைத்துள்ள விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சில அமைப்புகள் செப்டம்பர் 10ஆம் திகதி நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த அழைப்பு விடுத்துள்ளன.
இந்நிலையில், செப்டம்பர் மாதம் 8ஆம் திகதி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியுள்ளார் பிரதமர் பேய்ரூ.
விடயம் என்னவென்றால், நம்பிக்கை வாக்கெடுப்பில் பேய்ரூவை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
வாக்கெடுப்பில் பேய்ரூ தோல்வியை சந்திப்பாரானால், பிரான்ஸ் அரசு கவிழும் அபாயம் உருவாகியுள்ளது.
வாக்கெடுப்பில் பேய்ரூ தோல்வியை சந்தித்து, பிரான்ஸ் அரசு கவிழுமானால், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானும் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்று இடதுசாரிக் கட்சி ஒன்று குரல் கொடுத்துவருகிறது.
ஆக, செப்டம்பர் மாதம் 8ஆம் திகதி நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றியா தோல்வியா என்பதைப் பொருத்து, பிரான்ஸ் அரசியலில் பெரும் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |