பிரான்சில் காட்டுத்தீயை அணைக்க சென்ற ஹெலிகொப்டர்: அடுத்து நேர்ந்த விபரீதம்..அதிர்ச்சி வீடியோ
பிரான்சில் காட்டுத் தீயை அணைக்க ஹெலிகொப்டர் ஒன்று, தண்ணீரை உறிஞ்சியபோது விபத்தில் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.
10 ஹெக்டேர் பரப்பளவில் தீ
பிரான்சின் Beuzec-Cap-Sizunயில் 10 ஹெக்டேர் பரப்பளவில் தீப்பிடித்து எரிந்ததால் ஹெலிகொப்டர் வரவழைக்கப்பட்டது.
ரோஸ்போர்டனில் உள்ள ஏரியில் ஹெலிகொப்டர் ஒரு வாளி தண்ணீரை நிரப்ப முயற்சிக்கும்போது, விமானி மிக விரைவாக கீழே இயக்கியபோது பின்பகுதி தண்ணீரில் மூழ்கியது.
இதனால் ஹெலிகொப்டர் கட்டுப்பாட்டை இழந்து காற்றில் வேகமாக சுழன்று ஏரியில் விழுந்து விபத்திற்குள்ளானது.
அதிர்ஷ்டவசமாக ஹெலிகொப்டரின் விமானி மற்றும் தீயணைப்பு வீரர் இருவரும் உயிர்தப்பினர்.
உள்ளூர் அதிகாரிகள் இருவரின் தைரியத்தையும், புத்திசாலித்தனத்தையும் பாராட்டினர்.
இதுதொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |