மனைவி பிள்ளைகளை கத்தியைக் காட்டி மிரட்டிய பிரான்ஸ் நாட்டவர்: பொலிசார் அதிரடி
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், தன் மனைவியையும் பிள்ளைகளையும் கொன்று விடுவதாக கத்தியைக் காட்டி மிரட்டிய நபரை பொலிசார் சுட்டுப் பிடித்தனர்.
கத்தியைக் காட்டி மிரட்டிய நபர்
பிரான்சிலுள்ள Rennes நகரிலிருந்து தலைநகர் பாரீஸ் நோக்கி வந்துகொண்டிருந்த ரயில் ஒன்றில், தன் மனைவியையும் பிள்ளைகளையும் கத்தியைக் காட்டி மிரட்டிய ஒருவர் பயணித்துக்கொண்டிருப்பதாக பொலிசாருக்கு தகவலளிக்கப்பட்டுள்ளது.

பாரீஸிலுள்ள Montparnasse ரயில் நிலையத்தில் அந்த ரயில் வந்து நிற்கவும், அந்த நபர் கத்தியைக் காட்டியவாறே ரயிலிலிருந்து இறங்கியுள்ளார்.
அவருக்காக ரயில் நிலையத்தில் தயாராக காத்திருந்த பொலிசார் கத்தியைக் கீழே போடுமாறு கூற, அவர் மறுக்க, பொலிசார் அவரது காலில் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
உடனே அவர் தன்னைத்தான் தொண்டையில் குத்திக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், துப்பாக்கிக் குண்டு தெறித்ததில் ஒரு பயணியும் காயமடைந்துள்ளார். அவருக்கு அவசர உதவிக்குழுவினர் சிகிச்சை செய்துள்ளார்கள்.
துப்பாக்கியால் சுடப்பட்ட, கத்தியைக் காட்டி மிரட்டிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கும் அவசர உதவிக்குழுவினர் சிகிச்சையளித்துள்ளனர். அவரது கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |