பிரான்ஸ் அதிபர் மேக்ரான் விமானத்தில் வைத்து அறையப்பட்டாரா? வைரலாகும் வீடியோ
பிரான்ஸ் அதிபர் மேக்ரான் விமானத்தில் வைத்து அறையப்படுவது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், வியட்நாம், இந்தோனேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட தென் கிழக்கு ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
மேக்ரான் அறையப்பட்டாரா?
வியட்நாம் தலைநகர் ஹனோய் விமான நிலையத்திற்கு மனைவியுடன் வருகை தந்த போது, மேக்ரானின் மனைவி பிரிஜிட் மேக்ரான் அவரை கன்னத்தில் அறைவது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Macron getting slapped from his wife is on every news media but Israel literally burning alive children is not (this has video evidence as well)pic.twitter.com/bKgmz0WwUI
— Furkan Gözükara (@GozukaraFurkan) May 26, 2025
விமான கதவு திறந்தவுடன், மேக்ரானின் முகத்தில், சிவப்பு நிறை உடை அணிந்த ஒரு கை தள்ளுவது போன்று அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
சிறிது நேரத்தில் சிவப்பு நிற உடையில் அவரது மனைவி பிரிஜிட் மேக்ரான், விமானத்தின் உள்ளே இருந்து வெளியே வருகிறார். இதனால் அவரது மனைவி தான் அவரை அறைந்ததாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது.
முதலில் இந்த வீடியோவின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாகிய பிரான்ஸ் அதிபர் அலுவலகம், பின்னர் வீடியோ உண்மையானது என ஒப்புக்கொண்டது. அதேவேளையில் இது அவர்களுக்கு இடையேயான விளையாட்டான சண்டை என விளக்கமளித்துள்ளனர்.
இந்த வீடியோ பிரான்ஸ் அதிபருக்கு எதிராக ரஷ்யா ஆதரவு பெற்ற சமூகவலைத்தள கணக்குகளால் அதிகம் பகிரப்படுவதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |