பிரான்ஸில் சிறை கைதிகளின் வாகனத்தை மறித்து தாக்குதல்: தப்பி ஓடிய குற்றவாளி
பிரான்ஸில் சிறை கைதிகளின் வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் காவலர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்சின் நார்மாண்டி பகுதியில் சிறைக் கைதிகள் வாகனம் மீதான துணிச்சலான பகல் தாக்குதலில் இரு சிறை அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவத்தின் போது, தப்பி ஓடிய கைதி முகமது அம்ரா( Mohamed Amra), “பூச்சி" (The Fly) என அழைக்கப்படுபவர், தற்போது நடைபெற்று வரும் பெரும் தேடுதலின் மையப்புள்ளியாக இருந்து வருகிறார்.
வால்-டே-ரூயில்(Val-de-Reuil) அருகே உள்ள A154 மோட்டார் வழித்தடத்தில் உள்ள சுங்கக் கட்டத்தில் மதியம் 11 மணிக்கு சற்றுப் பின்னர் இந்த தாக்குதல் நடந்துள்ளது.
ருவான் நீதிமன்றத்தில் ஆஜரான பின்னர், உயர் பாதுகாப்பு சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்படும் போது, கனத்த ஆயுதம் ஏந்திய தாக்குதல்காரர்கள் தனித்தனி வாகனங்களில் சிறை வாகனத்தை இலக்கு வைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மார்சேய்லின் பிரபலமான "Blacks" கும்பலுடன் தொடர்புடைய சந்தேகிக்கப்பட்ட போதைப்பொருள் தலைவனான அம்ரா, தாக்குதலின் குழப்பத்தைப் பயன்படுத்தி தனது தாக்குதல்காரர்களுடன் தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது.
அம்ராவை கண்டுபிடிப்பதற்காக பிரான்சின் அதிகாரிகள் நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான அதிகாரிகளை பணியில் அமர்த்தியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |