ரஷ்ய அமைச்சரின் மனைவி செய்த ஏமாற்றுவேலை: பிரான்சில் ஆர்ப்பாட்டங்கள்
ரஷ்ய பாதுகாப்புத்துறை இணை அமைச்சரின் மனைவி, பிரான்சில் ஆடம்பரமாக வாழ்ந்துவருவதாகக் கூறி, பாரீஸிலுள்ள அவரது வீட்டின் முன் எதிர்ப்பாளர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டார்கள்.
பிரான்சில் வாழும் ரஷ்ய பாதுகாப்புத்துறை இணை அமைச்சரின் மனைவி
ரஷ்ய பாதுகாப்புத்துறை இணை அமைச்சரான Timur Ivanovஇன் மனைவியான Svetlana Maniovich, பாரீஸிலுள்ள ஒரு வீட்டில் வாழ்ந்துவருகிறார்.
நேற்று, ஞாயிற்றுக்கிழமை அவரது வீட்டின் முன் திரண்ட எதிர்ப்பாளர்கள், Maniovich மீது தடைகள் விதிக்கவேண்டும் என்றும், அவர் ஐரோப்பாவில் வாழ அனுமதிக்கக்கூடாது, அவரது சொத்துக்களை முடக்கவேண்டும் என்றும் கோரி முழக்கமிட்டனர்.
அவர்களில் ஒருவர் ஏந்தியிருந்த பதாகையில், ரஷ்யாவில் கொள்ளையடிக்கிறார், உக்ரைனில் கொலை செய்கிறார், மனைவியோ பிரான்சில் வாழ்கிறார் என எழுதப்பட்டிருந்தது.
தடைகளிலிருந்து தப்புவதற்காக ரஷ்ய அமைச்சரின் மனைவி செய்த ஏமாற்றுவேலை
அதாவது, Ivanovஇன் மனைவியான Maniovich, உக்ரைன் போர் துவங்கியதும், பிரான்சுக்கு வந்துவிட்டாராம், அங்கு அவர் ஆடம்பரமாக வாழ்ந்துவருவதாக எதிர்ப்பாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
அத்துடன், தடைகளிலிருந்து தப்புவதற்காக அமைச்சர் Ivanovம் அவரது மனைவியான Maniovichம் 2022 ஜூனில் விவாகரத்து செய்துகொண்டார்களாம்.
இப்போதும், Maniovichக்கு Ivanov நிதியுதவிகள் செய்துவர, அவர் பிரான்சில் ஆடம்பரமாக வாழ்வதாக குற்றம் சாட்டுகிறார்கள் எதிர்ப்பாளர்கள்.