பிரான்ஸ் நாட்டு கலவரம்: துப்பாக்கி விற்பனை கடைக்குள் புகுந்த சூறையாடிய கொள்ளையர்களால் அதிகரிக்கும் பதற்றம்
பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் கலவரத்துக்கு மத்தியில் கலவரக்காரர்கள் கூட்டம் ஒன்று துப்பாக்கி விற்பனை நிலையத்தை உடைத்து கொண்டு சென்று திருட்டு சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர்.
துப்பாக்கி கடைக்குள் புகுந்த கலவரக்காரர்கள்
பிரான்ஸில் 17 வயது சிறுவன் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து பிரான்ஸ் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நான்காவது நாள் இரவாக கலவரங்கள் வெடித்து வருகிறது.
இதுவரை கிட்டத்தட்ட 1000 பேரை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ள நிலையில், நேற்று இரவு மட்டும் பாதுகாப்பு பணியின் போது 79 பொலிஸார் படுகாயமடைந்துள்ளனர்.
இதற்கிடையில், மார்சேய் என்ற நகரில் உள்ள துப்பாக்கி விற்பனை செய்யும் கடை ஒன்றை கொள்ளையர்கள் உடைத்ததுடன் மட்டுமின்றி அங்கிருந்த சில துப்பாக்கிகளுடன் சிலர் தப்பி ஓடியுள்ளனர் என பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அப்பகுதிக்கு அருகே உள்ள இடத்தில் துப்பாக்கியுடன் நின்ற ஒருவரை பொலிஸார் மடக்கி பிடித்து கைது செய்து இருப்பதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
Some of the rioters in France assert their dominance of the streets by firing their illegal automatic weapons in the air.
— Visegrád 24 (@visegrad24) June 30, 2023
The French gangs are better armed today than ever, making the job of the riot police even more dangerous.
Video from the city of Oyonnax pic.twitter.com/EEg2ncD4n8
துப்பாக்கிகளுடன் கலவரக்காரர்கள் அராஜகம்
இந்நிலையில் பிரான்ஸ் நாட்டின் சாலைகளில் சில கலவரக்காரர்கள் கையில் துப்பாக்கிகளுடன் அலையும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓயோனாக்ஸ் நகரில் சில கலவரக்காரர்கள் தங்களிடம் இருந்த சட்டவிரோதமான தானியங்கி இயந்திரத் துப்பாக்கிகளை வானை நோக்கி சுட்டு தங்கள் ஆதிக்கத்தை வீதிகளில் வெளிப்படுத்தினர்.
கலவரக்காரர்களிடம் சிறப்பான ஆயுதங்கள் சிக்கி இருப்பதால் கலவரத்தை கட்டுப்படுத்த பொலிஸார் திணறி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |