புகையிலை கட்டுப்பாடுகளை தளர்த்திய பிரான்ஸ்: சர்ச்சைக்குரிய முடிவு நல்லதா கெட்டதா?
பிற ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இருந்து பயணிகள் கொண்டு வரக்கூடிய புகையிலையின் எண்ணிக்கைக்கான கட்டுப்பாடுகளை பிரான்ஸ் நீக்கியுள்ளது.
புகையிலையின் வரம்பை நீக்கிய பிரான்ஸ்
பிற ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இருந்து பயணிகள் கொண்டு வரும் புகையிலைகளின் எண்ணிக்கைக்கான கட்டுப்பாடுகளை ஐரோப்பிய யூனியன் நாடுகளுடன் சேர்ந்து பிரான்ஸும் நீக்கியுள்ளது.
2024 மார்ச் 29ம் திகதி முதல் அமலுக்கு வரும் இந்த மாற்றம், ஒரு நபருக்கு ஒரு கார்ட்டன் (200 புகையிலைகள்) என்ற முந்தைய வரம்பை நீக்குகிறது.
இந்த நடவடிக்கை ஐரோப்பிய யூனியன் விதிமுறைகளுடன் பிரான்சை இணைக்கிறது, அத்துடன் இது தனிப்பட்ட பயன்பாட்டிற்கு குறைந்தபட்சம் 800 சிகரெட் வைத்திருக்க அனுமதிக்கிறது.
To comply with European law, France has lifted the limit of 200 cigarettes that a smoker is allowed to bring back from another EU country. In the decree, which came into force on Friday March 29, the government chose not to set a threshold. Officially, there are no more limit... pic.twitter.com/xAxvyQtzTQ
— Brussels Watch (@BrusselsWatch) April 2, 2024
பிரான்ஸில் சிகரெட் விலை ஐரோப்பிய நாடான ஸ்பெயினுடன் ஒப்பிடுகையில் விலை சற்று அதிகமாக உள்ளது. இரண்டு பெட்டி புகையிலைகள் ஸ்பெயினில் €107 விற்பனை செய்யப்படுகிறது. இது பிரான்ஸில் விலையுடன் ஒப்பிடுகையில் பாதி விலையாகும்.
இருப்பினும், இந்த புதிய கொள்கை கலவையான எதிர் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.
கடத்தலுக்கு எதிரான நடவடிக்கை
பிரான்ஸ் அதிகாரிகள் இந்த மாற்றம் சுங்க நடைமுறைகளை எளிதாக்கும் என்று நம்புகின்றனர்.
முன்னதாக, வரம்பை மீறிய அளவில் புகையிலைகளை கொண்டு வந்த பயணிகள் விளக்கம் அளிக்க வேண்டியிருந்தது, பறிமுதல் செய்யப்படவும் வாய்ப்பு இருந்தது.
இந்த அணுகுமுறை தனிப்பட்ட பயன்பாடு மற்றும் புகையிலை கடத்தல் ஆகியவற்றுக்கு இடையே வேறுபடுவதை கடினமாக்குகிறது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அதிகரிக்கும் கவலைகள்
இது புகைப்பழக்கத்தை அதிகரிக்கும் என்று புகைப்பழக்கத்தை எதிர்ப்பவர்கள் இந்த முடிவை கடுமையாக விமர்சிக்கின்றனர்.
குறிப்பாக அதிக விலையின் காரணமாக குறையும் புகைப்பழக்கம், இந்த புதிய நடைமுறையின் மூலம் அதிகரிக்கும் என்று அஞ்சுகின்றனர்.
ஐரோப்பிய யூனியனில் மிக உயர்ந்த புகையிலை வரிகள் பிரான்ஸில் உள்ளன, இது சில புகைப் பிடிப்பவர்களை மலிவான விலையில் புகையிலை கிடைக்கும் அண்டை நாடுகளுக்கு பயணம் செய்ய தூண்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
France cigarette limit, EU cigarette limit, France cigarettes from other EU countries, France tobacco limit, France lifts cigarette limit France ends cigarette limit eu, impact of France lifting cigarette limit, concerns about France lifting cigarette limit, France cigarette limit for personal use,