பிரித்தானியாவில் பட்டப்பகலில் பயங்கரம்! மான்செஸ்டரில் 17 வயது சிறுவனுக்கு கத்திக்குத்து
பிரித்தானியாவின் மான்செஸ்டரில் நேற்று நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மான்செஸ்டரில் இளைஞருக்கு ஏற்பட்ட துயரம்
மான்செஸ்டரில் நேற்று நடந்த கத்திக்குத்துக்கு இறையாகி ஒரு இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிரேட்டர் மான்செஸ்டர் காவல்துறை (GMP) தகவல்படி, நேற்று, ஏப்ரல் 4ம் திகதி, வியாழக்கிழமை மாலை 4:15 மணியளவில் ராபி தெருவில்(Raby Street) கத்திக்குத்து தொடர்பான தகவல் கிடைத்துள்ளது.
#NEWS | Officers are responding to a serious incident in Moss Side.
— Greater Manchester Police (@gmpolice) April 4, 2024
GMP were called shortly after 4.15pm this evening to reports of a stabbing on Raby Street.
A teenage boy has been taken to hospital with serious and life-threatening injuries.
More: https://t.co/Owzrfzs2zB pic.twitter.com/P8shRXODkb
கொலை செய்யப்பட்ட 17 வயது சிறுவனின் பெயர் இன்னும் வெளியிடப்படவில்லை. அவர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், மருத்துவக் குழுவினரின் தீவிர முயற்சிகளையும் மீறி, இளைஞர் சிறிது நேரத்திலேயே உயிரிழந்துவிட்டார்.
இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை
இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸாரின் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ராபி தெரு பகுதியை சுற்றி காவல்துறை அதிகாரிகள் வேலி அமைத்துள்ளனர்.
குற்றச் சம்பவத்தில், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. மான்செஸ்டர் நகர மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் Simon Moyles தனது இரங்கல் தெரிவித்தார்.
அத்துடன் "இது ஒரு துயரமான மற்றும் அர்த்தமற்ற உயிரிழப்பு. இந்த கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல்கள்." என குறிப்பிட்டார்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான தகவல் உள்ளவர்கள் முன் வந்து தகவல் வழங்குமாறு GMP கேட்டுக் கொண்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
manchester teenage boy stabbed, manchester stabbing moss side, GMP manchester stabbing, teenager dies after stabbing manchester, GMP appeal for information manchester stabbing,