ரஷ்யாவை அவமானப்படுத்தக் கூடாது...பிரான்ஸ் ஜனாதிபதிக்கு உக்ரைன் கண்டனம்!
உக்ரைன் மீதான போர் நடத்தைகளை அடிப்படையாக கொண்டு ரஷ்யாவை அவமானப்படுத்தக் கூடாது என தெரிவித்த பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் கூற்றை உக்ரைனின் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா கண்டித்துள்ளார்.
உக்ரைனின் மீதான போர் நடவடிக்கையை ரஷ்யா மேற்கொண்டதன் மூலம், வரலாற்று மற்றும் அடிப்படையை பிழையை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் செய்துவிட்டார், ஆனால் அதற்காக யாரும் ரஷ்யாவை அவமானப்படுத்தும் செயல்களில் ஈடுபடக் கூடாது என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வெள்ளிக்கிழமையான நேற்று தெரிவித்து இருந்தார்.
அத்துடன் ஜனாதிபதி புடின் ரஷ்ய மக்கள் மற்றும் ரஷ்ய நாட்டை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார், இந்த தனிமைப்படுத்துதல் மிகவும் எளியது, ஆனால் அவற்றில் இருந்து வெளியேறுவது மிகவும் கடினமான ஒன்று என தெரிவித்து இருந்தார்.
Calls to avoid humiliation of Russia can only humiliate France and every other country that would call for it. Because it is Russia that humiliates itself. We all better focus on how to put Russia in its place. This will bring peace and save lives.
— Dmytro Kuleba (@DmytroKuleba) June 4, 2022
இந்தநிலையில், பிரான்ஸ் ஜனாதிபதியின் கூற்றுக்கு பதிலளித்துள்ள உக்ரைன் வெளியுறத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா, ரஷ்யாவை அவமதிப்பதை தவிர்க்க வேண்டும் என்ற கூற்று பிரான்ஸ் மற்றும் அதனை ஆதரிக்கும் நாடுகளை தான் அவமானப்படுத்தும் என தெரிவித்துள்ளார்.
மேலும் ரஷ்யா தான் தன்னை அவமானப்படுத்திக் கொள்கிறது என்றும், ரஷ்யாவை அதன் இடத்தில் வைப்பதில் நட்பு நாடுகள் கவனம் செலுத்த வேண்டும், அப்போது தான் அமைதியை கொண்டு வர முடியும் மற்றும் உயிர்களை காப்பாற்ற முடியும் எனத் தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: ரஷ்ய போர் நிறைவடைந்த பிறகு...இந்தியாவிற்கு உக்ரைன் முன்வைக்கும் மனிதாபிமான வேண்டுகோள்
இதனைத் தொடர்ந்து, ரஷ்யாவின் போர் நடவடிக்கைகள் மிருகத்தனமானது என உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளதால், உக்ரைனின் நிலப்பரப்பில் ரஷ்யா எத்தகைய சலுகைகளும் எதிர்பார்க்க கூடாது என உக்ரைன் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவை அவமானப்படுத்தக் கூடாது என்ற பிரான்ஸ் ஜனாதிபதியின் இந்த கூற்றை இத்தாலியின் பிரதமர் மரியோ டிராகியும் ஆதரவளித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.