பிரித்தானியாவுக்குள் நுழைய புலம்பெயர்வோர் செய்யும் ஏமாற்றுவேலை: பிரான்ஸ் அதிகாரிகள் புகார்
பிரித்தானியாவுக்குள் நுழைவதற்காக புலம்பெயர்வோர் தாங்கள் ஆபத்திலிருப்பதாக போலியாக அழைப்பு விடுப்பதாக பிரான்ஸ் அதிகாரிகள் புகார் தெரிவித்துள்ளார்கள்.
புலம்பெயர்வோர் செய்யும் ஏமாற்றுவேலை
பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழைவதற்காக, புலம்பெயர்வோர் தாங்கள் ஆபத்திலிருப்பதாக போலியாக உதவி கோரி அழைப்பு விடுப்பதாக பிரான்ஸ் கடலோரக் காவல்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
ஆங்கிலக்கால்வாயில் சிறுபடகுகளில் பயணிக்கும் அவர்கள் ’Mayday’ அழைப்பு விடுக்க, தாங்கள் அவர்களுக்கு உதவச் செல்வதாகவும், அங்கு சென்று பார்த்தால், அவர்களுக்கு பிரச்சினை எதுவும் இல்லை, அவர்கள் போலியாக உதவி கோரி அழைத்துள்ளது தெரியவருவதாகவும் தெரிவிக்கிறார்கள் பிரான்ஸ் அதிகாரிகள்.
ஆனாலும், அவர்களை அப்படியே விட்டுவிட்டு வரமுடியவில்லை என்கிறார்கள் அவர்கள். ஒருவேளை தாங்கள் அவர்களை விட்டுவிட்டு வந்த சிறிது நேரத்தில் அவர்களுடைய படகு மூழ்கிவிட்டால் என்ன செய்வது என்றும் பிரான்ஸ் அதிகாரிகள் கேட்கிறார்கள்.
இப்படி ஆட்கடத்தல்காரர்கள் கொடுத்துள்ள புதிய யோசனையின்படி புலம்பெயர்வோர் ஏமாற்றி உதவி கோரி அழைக்க, அவர்களைத் தாங்கள் பிரித்தானிய அதிகாரிகளிடம் ஒப்படைப்பதைத் தவிர தங்களுக்கு வேறு வழியில்லை என்றும் பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |