அமெரிக்கா ஈரான் போர் தவிர்க்கமுடியாதது... பிரான்ஸ் எச்சரிக்கை
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் போர் உருவாவது தவிர்க்கமுடியாதது என்று கூறியுள்ளது பிரான்ஸ்.
அமெரிக்கா ஈரான் போர் தவிர்க்கமுடியாதது...
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், பெர்சியன் வளைகுடா பகுதிக்கு போர்க்கப்பல்களையும், போர் விமானங்களையும் அனுப்பிவருகிறார்.
அமெரிக்காவும் இஸ்ரேலும், ஈரான் மீது பெரும் தாக்குதல் ஒன்றை நிகழ்த்த திட்டமிட்டுவருவதாக செய்திகள் வெளியாகிவருவதையடுத்து மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் உருவாகியுள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் அணு ஆயுதம் தொடர்பிலான ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டாலொழிய, இரு நாடுகளுக்கும் இடையில் போர் உருவாவதைத் தடுக்கமுடியாது என்று கூறியுள்ளார் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சரான ஜீன் நோயல் பாரட் (Jean-Noel Barrot).
பிரான்சைப் பொருத்தவரை, ஈரான் அணு ஆயுதங்களைப் பெறக்கூடாது என்பதுதான் எங்கள் நிலைப்பாடு என்று கூறியுள்ள பாரட், ஈரானுடைய அணு ஆயுத திட்டத்தைக் கட்டுப்படுத்துவதே எங்கள் முன்னுரிமை என்றும் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |