எங்கள் பக்கம் தவறு... முதன்முறையாக ஒப்புக்கொண்ட பிரான்ஸ்
புலம்பெயர்ந்தோர் ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைவதைத் தடுக்க தாங்கள் தவறிவிட்டதாக பிரான்ஸ் முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது.
எங்கள் பக்கம் தவறு...
பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாயைக் கடந்து சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரை தடுத்து நிறுத்துவதற்காக பிரான்சுக்கு பிரித்தானியா 500 மில்லியன் பவுண்டுகள் கொடுத்துள்ளது.
அவ்வளவு பணத்தை வாங்கிய பிறகும் பிரான்ஸ் தங்கள் தரப்பு பணியை ஒழுங்காகச் செய்யவில்லை என பிரித்தானியா தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இப்படி ஆங்கிலக்கால்வாயில் பயணிக்கும் புலம்பெயர்வோரை தடுத்து நிறுத்துவதற்கு பதிலாக, பிரித்தானிய எல்லை பாதுகாப்புபடையினர் வந்து அவர்களை மீட்கும் வரை, பிரான்ஸ் கடற்படை அவர்கள் படகுகளுக்கு பாதுகாப்பாக நிற்கிறது.
இந்நிலையில், பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாயைக் கடந்து சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரை தடுத்து நிறுத்துவதற்காக தாங்கள் கூடுதல் முயற்சி எடுக்கவேண்டும் என்பதை ஒப்புக்கொண்டுள்ளார் பிரான்ஸ் உள்துறை அமைச்சரான புரூனோ (Bruno Retailleau).
இதுவரை, கடலில் பயணிக்கும் மக்களை காப்பாற்றவேண்டும், ஆனாலும், நாங்கள் அதற்காக ரிஸ்க் எடுப்பதில்லை என்பதுதான் எங்கள் நாட்டுக் கொள்கை என்று எண்ணியிருந்தோம்.
ஆகவேதான் எங்கள் கடற்படையினர் சிறுபடகுகளில் பயணிக்கும் புலம்பெயர்வோருடன் பயணிக்கிறார்கள்.
ஆனால், நாங்கள் எங்கள் கொள்கைகளை மாற்றிக்கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார் புரூனோ.
அத்துடன், இந்த புலம்பெயர்வோர் ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவை அடைந்தாலும், அவர்களை மீண்டும் பிரான்சுக்கே திருப்பி அனுப்பிவிடும் வகையில், பிரான்சும் பிரித்தானியாவும் ஒப்பந்தம் செய்துகொள்ளவேண்டும் என்கிறார் புரூனோ.
இப்படி சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழையும் பலர் திரும்பி வருவதில்லை என்பதை நாங்கள் பார்க்கிறோம் என்று கூறும் புரூனோ, ஆகவே, அப்படி புலம்பெயர்வோர் ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவை அடைந்தாலும், அவர்களை மீண்டும் பிரான்சுக்கே திருப்பி அனுப்பிவிட்டால், அது நல்ல பலனைக் கொடுக்கும் என்கிறார்.
ஆக, ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவை அடைந்தாலும், அவர்களை மீண்டும் பிரான்சுக்கே திருப்பி அனுப்பிவிட்டால், அது சட்டவிரோத புலம்பெயர்வோருக்கு தெளிவான செய்தி ஒன்றை அனுப்பும் என்கிறார் அவர்.
மேலும், புலம்பெயர்ந்தோரை பிரித்தானியாவுக்குள் கடத்தும் கும்பல்களை கலைத்தால் போதாது, ஒரு கும்பலைக் கலைத்தால் இன்னொரு கும்பல் முளைக்கும்.
ஆகவே, புலம்பெயர்வோர் சட்டவிரோதமாக பிரித்தானியாவில் வேலை செய்வதை கட்டுப்படுத்தினாலே, பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய அவர்கள் யோசிப்பார்கள் என்றும் கூறியுள்ளார் அவர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |