பிரான்சில் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூடு: 14 வயது மாணவன் கைது
பிரான்சில் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 14 வயது மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பள்ளியில் துப்பாக்கிச் சூடு
திங்கட்கிழமை காலை தெற்கு பிரான்ஸின் ஓபான்(Aubagne) நகரில் உள்ள பள்ளி ஒன்றில் திடீரென துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று அரங்கேறியது.
14 வயது பள்ளி மாணவர் ஒருவர் கிட்டார் உறைக்குள்(Guitar Case) மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.
முதல் தளத்தில் தாக்குதல் நடத்திய போது 53 வயது பள்ளி முதல்வரும், 37 வயது ஆசிரியர் ஒருவர் பலத்த காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் 3வது நபர் ஒருவருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது.
பின்னர் இரண்டாம் தளத்தில் நுழைந்த அந்த மாணவர், ஆசிரியருக்கு முன்னாள் தரையை நோக்கியும், வகுப்பறையில் உள்ள சுவர்களை நோக்கியும் சுட்டுள்ளார்.
அதிர்ஷ்டவசமாக இதில் மாணவர்கள் மற்றும் ஆசிரியருக்கு எந்தவொரு காயமும் ஏற்படவில்லை.

மாணவர் கைது
துப்பாக்கிச் சூடு சம்பவ இடத்திற்கு விரைந்த பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு 14 வயது மாணவனை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
இந்த சம்பவத்தை அடுத்து மாணவரின் வீட்டை சோதனையிட்ட அதிகாரிகள், அங்கிருந்து பல்வேறு வகையான ஆயுதங்களை கைப்பற்றியுள்ளனர்.
மேலும் சிறுவனின் பெற்றோர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.