பிரித்தானியாவின் உதவி.. அதிரடி காட்டிய பிரெஞ்சு கடற்படை: சிக்கிய ரஷ்ய எண்ணெய் கப்பல்
பிரித்தானியா வழங்கிய உளவுத் தகவல்களின் அடிப்படையில் பிரான்சின் கடற்படை, ரஷ்யாவிலிருந்து புறப்பட்ட ஒரு எண்ணெய் கப்பலைக் கைப்பற்றியுள்ளது.
பிரெஞ்சு கடற்படை
மத்தியதரைக் கடலில் குறித்த கமாண்டோ பாணி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்தியதரைக் கடலுக்கான பிரெஞ்சு கடல்சார் அதிகாரிகள் தெரிவிக்கையில், Grinch என்ற அந்தக் கப்பல் போலியான கொடியைப் பயன்படுத்தி இயங்குவதாகச் சந்தேகிக்கப்படுவதாகத் தெரிவித்தனர்.
இதனிடையே, மேலதிக சோதனைகளுக்காக பிரெஞ்சு கடற்படை அந்த கப்பலை துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும் அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எண்ணெய் வருவாய் என்பது ரஷ்யப் பொருளாதாரத்தின் ஒரு முக்கியப் பகுதியாகும். இது ஜனாதிபதி விளாடிமிர் புடின், சாதாரண மக்களைப் பாதிக்காத வகையிலும், நாணய வீழ்ச்சியைத் தவிர்த்தும், உக்ரைனுக்கு எதிரான போருக்காகப் பணத்தைச் செலவிட அனுமதிக்கிறது.
Nous ne laisserons rien passer.
— Emmanuel Macron (@EmmanuelMacron) January 22, 2026
La Marine nationale a arraisonné ce matin un navire pétrolier en provenance de Russie, sous sanctions internationales et suspecté d'arborer un faux pavillon.
Cette intervention a été effectuée en haute mer, en Méditerranée,… pic.twitter.com/6mHMvGtB94
இந்த நிலையில், பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகள், ரஷ்யாவிற்காக செயல்படும் இந்த சட்டத்திற்கு புறம்பான எண்ணெய் கப்பல்களின் செயற்பாடுகளை முறியடிக்க தீவிர நடவடிக்கைகள் முன்னெடுத்து வருகின்றனர்.
நிபுணர்களின் கூற்றுப்படி, 400-க்கும் மேற்பட்ட கப்பல்கள் இதுபோன்று செயல்படுவதாக தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், சர்வதேசச் சட்டத்தைப் பேணிப் பாதுகாப்பதற்கும், தடைகளைத் திறம்பட அமுல்படுத்துவதை உறுதி செய்வதற்கும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் அந்த ரஷ்ய எண்ணெய் கப்பல் விவகாரம் குறித்துப் பதிவிட்ட ஒரு செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியாவுடன் இணைந்து
இப்படியான கப்பல்களால் திரட்டப்படும் நிதியை உக்ரைனுக்கு எதிராக விளாடிமிர் புடின் போருக்குப் பயன்படுத்துகிறார் என்றும் மேக்ரான் பதிவிட்டுள்ளார்.
பிரெஞ்சு இராணுவ அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்த பிரெஞ்சு நடவடிக்கையானது பிரித்தானியாவுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது என்றும், அவர்கள் திரட்டிய மற்றும் பகிர்ந்துகொண்ட உளவுத் தகவல்களே கப்பலை இடைமறிக்க உதவியது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
அந்தக் கப்பல் கிழக்கு ஆப்பிரிக்காவிற்கு அருகில் உள்ள கொமொரோஸ் தீவுகளின் கொடியின் கீழ் பயணித்தது என்றும், அது போலியான அடையாளம் எனவும், குறித்த கப்பலின் ஊழியர்கள் அனைவரும் இந்தியர்கள் எனவும் பிரெஞ்சு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மேற்கு மத்தியதரைக் கடலில், தெற்கு ஸ்பெயினில் உள்ள அல்மேரியா என்ற கடலோர நகரத்திற்கு அருகே குறித்த கப்பல் இடைமறிக்கப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |