போலந்துக்கு 3 ரபேல் விமானங்களை அனுப்பி வைத்த பிரான்ஸ்: மக்ரோன் அளித்த வாக்குறுதி
ஐரோப்பிய பிராந்தியத்தை வலுப்படுத்தும் நோக்கில் போலந்துக்கு ரபேல் ஜெட் விமானங்களை பிரான்ஸ் அனுப்பியுள்ளது.
ரஷ்யாவின் அத்துமீறல்
ரஷ்யாவின் ஆளில்லா விமானங்கள் சமீபத்தில் போலந்து எல்லைக்குள் நுழைந்ததை அடுத்து நேட்டோ படைகள் மற்றும் போலந்து போர் விமானங்கள் இணைந்து சுட்டு வீழ்த்தின.
இதையடுத்து போலந்தின் கிழக்கு எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. மேலும் பல ஐரோப்பிய நாடுகள் பிராந்தியத்தை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
போலந்துக்கு 3 ரபேல் விமானங்கள்
இதன் தொடர்ச்சியாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், போலந்தின் வான் பரப்பை பாதுகாக்கவும், ஐரோப்பாவின் கிழக்கு எல்லையில் வலுப்படுத்தவும் 3 ரபேல் விமானங்களை அனுப்பி இருப்பதாக அறிவித்துள்ளார்.
W związku z wtargnięciem rosyjskich dronów do Polski, podjąłem decyzję o mobilizacji trzech myśliwców Rafale, aby wesprzeć ochronę polskiej przestrzeni powietrznej i wschodniej flanki Europy wraz z naszymi sojusznikami z NATO.
— Emmanuel Macron (@EmmanuelMacron) September 11, 2025
Złożyłem to zobowiązanie…
இது தொடர்பாக மேக்ரான் தனது X தளத்தில் வெளியிட்ட பதிவில், போலந்து பிரதமரிடம் நேற்று இது குறித்த உறுதியளித்துள்ளேன், மேலும் பிரித்தானிய பிரதமர் ஸ்டார்மர் மற்றும் நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட் ஆகியோருடனும் விவாதித்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |