உக்ரைனில் களமிறங்கிய பிரான்ஸின் முக்கிய படைக்குழு! வெளியான ஆதாரம்
உக்ரைனில் நடத்தப்பட்ட போர்க்குற்றங்கள் குறித்த விசாரணைக்கு உதவ பிரான்ஸ் பிரதிநிதிகள் குழு வந்துள்ளது.
பிரான்ஸ் பிரதிநிதிகள் உக்ரைன் வந்தடைந்ததை உக்ரைனுக்கான பிரான்ஸ் தூதர் Etienne de Poncins தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கிவ்வைச் சுற்றி நடந்த போர்க்குற்றங்கள் பற்றிய விசாரணையில் உக்ரேனிய அதிகாரிகளுக்கு உதவ லிவிவ் வந்தள்ள பிரான்ஸ் தொழில்நுட்ப மற்றும் அறிவியல் gendarmes குழுவை வரவேற்பதில் நான் பெருமைப்படுகிறேன்.
gendarmes என்பது பிரான்சில் ஆயுதப்படைகளின் ஒரு பகுதியாக இருக்கும் பொலிஸ் படையாகும்.
இலங்கைக்கு ஏற்பட்டுள்ள அதேநிலை இந்தியாவிற்கு ஏற்படும்! சீமான் எச்சரிக்கை
Fier d'accueillir à #Lviv le détachement des gendarmes techniques et scientifiques venu assister leurs camarades ?? dans les investigations des crimes de guerre commis autour de #Kiev. La ?? première à apporter une telle aide. Ils seront à pied d'œuvre dès demain. Solidarité ???? pic.twitter.com/3pX9LkPzeq
— Etienne de Poncins (@EdePoncins) April 11, 2022
உக்ரைனுக்கு இதுபோன்ற உதவியளிக்கும் முதல் நாடு பிரான்ஸ் என குறிப்பிட்ட Etienne de Poncins, ஏப்ரல் 12ம் திகதி முதல் பிரான்ஸ் பிரதிநிதிகள் குழு தங்கள் பணியை தொடங்குவார்கள் என தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது படையெடுத்து வரும் ரஷ்யா, அந்நாட்டின் புச்சா நகரில் மக்களை படுகொலை செய்து போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
புச்சா படுகொலைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா, பிரித்தானியா நாடுகள் ரஷ்ய மீது புதிய கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.