யூத குடிமக்களுக்கு பிரான்ஸில் ஆபத்தா? நெதன்யாகுவின் விமர்சனத்திற்கு மக்ரோன் பதிலடி!
பாலஸ்தீனம் தொடர்பான பிரான்சின் முடிவை இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு விமர்சனம் செய்துள்ளதற்கு பிரான்ஸ் ஜனாதிபதி அலுவலகம் பதிலடி கொடுத்துள்ளது.
பாலஸ்தீன நாட்டிற்கு அங்கீகாரம்
காசாவை முழுவதுமாக கட்டுப்பாட்டில் வைக்கும் இஸ்ரேல் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் பாலஸ்தீனத்தை நாடாக பிரான்ஸ் அங்கீகரிக்கும் என கடந்த மாதம் ஐக்கிய நாடுகள் சபையில் அறிவித்தார்.
இந்த அறிவிப்பின் மூலம் ஜி7 நாடுகளில் பாலஸ்தீன நாட்டை அங்கீகரிக்கும் முதல் நாடாக பிரான்ஸ் இருக்கும்.
நெதன்யாகு-க்கு பதிலடி
இந்நிலையில் பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்கும் மக்ரோனின் முடிவு பிரான்சில் உள்ள யூதர்களுக்கு எதிரான வெறுப்பை தூண்டும் என இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு குற்றம் சாட்டியிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பிரதமர் நெதன்யாகுவின் குற்றச்சாட்டு “அற்பமானது மற்றும் தவறானது” என பிரான்ஸ் கண்டித்துள்ளது.
அத்துடன், பிரான்சின் யூத குடிமக்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவர்களை எப்போதும் பிரான்ஸ் பாதுகாக்கும் என்றும் ஜனாதிபதி மேக்ரான் அலுவலகம் அறிவித்துள்ளது.
மேலும் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவின் குற்றச்சாட்டுக்கு பதில் வழங்கப்படாமல் இருக்காது என்றும் தெரிவித்துள்ளது.
இது தீவிரத்தன்மை மற்றும் பொறுப்புக்கான நேரம், குழப்பம் மற்றும் கையாளுதலுக்குரிய நேரம் இல்லை என்றும் பிரான்ஸ் ஜனாதிபதி அலுவலகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |