பல நாடுகள் தடை செய்த தடுப்பூசிகளை தொடர்ந்து பயன்படுத்த முடிவு! ரிஸ்க் எடுக்கும் பிரபல நாடு
பிரான்ஸ் அரசாங்கம் இரத்த உறைவு பிரச்சினைகள் குறித்த கவலைகளுக்கு மத்தியில் அஸ்ட்ராஜெனேகா மற்றும் ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசிகளை தொடர்ந்து பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
ஜான்சன் அண்ட் ஜான்சனின் ஒற்றை டோஸ் கொரோனா தடுப்பூசியால் அரிதான இரத்தம் உறைதல் பிரச்சினை ஏற்படுவதால் அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் அந்த மருந்தை பயன்படுத்த தற்காலிகமாக தடைவிதித்துள்ளது.
ஆனால், பிரான்ஸ் அரசு அதன் தடுப்பூசி திட்டத்திலிருந்து வெளியேறவில்லை என்றும் ஜான்சன் & ஜான்சன் கொரோனா தடுப்பூசியை தொடர்ந்து 55 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு வழங்க திட்டமிட்டுருப்பதாகவும் அரசாங்க செய்தி தொடர்பாளர் Gabriel Attal கூறியுள்ளார்.
ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திடமிருந்து இதுவரை 200,000 டோஸ்களை ஏற்கெனெவே பெற்றுள்ள நிலையில், அவற்றை பொது மருத்துவர்களுக்கு மற்றும் மருந்தகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல், புதன்கிழமையன்று உலகிலேயே முதல் நாடாக டென்மார்க், இரத்த உறைதல் பிரச்சினை காரணமாக அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை முற்றிலுமாக தடை செய்ததது. பல நாடுகளும் 55 அல்லது 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் அதனை பயன்படுத்த முடிவெடுத்துள்ளது.
ஆனால், அதற்கு நேர்மாறாக "கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் அத்தியாவசிய கருவியாக அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது" என Attal கூறியுள்ளார்.