சிங்கப்பூரில் பிரான்ஸ் நாட்டு மாணவரின் தகாத செயல்: ஆரஞ்சு ஜூஸ் இயந்திரத்தில் அதிரடி மாற்றம்
சிங்கப்பூரில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மாணவர் ஒருவர் சட்ட நடவடிக்கையை எதிர்கொண்டுள்ளார்.
வைரலான வீடியோ
கடந்த மார்ச் 12ம் திகதி பிரான்ஸ் நாட்டை சேர்ந்த வணிகவியல் மாணவரான டிடியர் காஸ்பார்ட் ஓவன் மாக்ஸிமிலியன்(Didier Gaspard Owen Maximillien) ஆரஞ்சு ஜூஸ் விற்பனை இயந்திரத்தில் வைக்கப்பட்டிருந்த ஸ்ட்ராவை(Straw) எடுத்து நக்கிவிட்டு மீண்டும் அதே இடத்தில் வைத்துள்ளார்.
இதனை வீடியோவாக பதிவு செய்து மாக்ஸிமிலியன் இணையத்தில் பதிவேற்றியும் உள்ளார். ஆனால் இந்த சம்பவம் பொது மக்களிடையே கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து மாக்ஸிமிலியன் மீது பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்தல் மற்றும் குறும்புத்தனம் அல்லது சேதம் விளைவித்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் ஒப்புதல் வழங்குவார் என எதிர்பார்ப்பு

இந்நிலையில் ஜூலை 13ம் திகதி சர்ச்சைக்குரிய வீடியோ தொடர்பான விசாரணையில், தனது வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் அப்போது மாக்ஸிமிலியன் தன்னுடைய குற்றத்தை தனது வழக்கறிஞர் மூலமாக ஒப்புக்கொள்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மாக்ஸிமிலியன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், பொது தொலைக்காக 6 மாதம் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் அத்துடன் சேதம் விளைவித்தல் குற்றச்சாட்டின் கீழ் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படலாம்.
இதற்கிடையில் இந்த சம்பவம் சுகாதார பாதுகாப்பு தொடர்புடையது என்பதால் இயந்திரத்தில் இருந்த அனைத்து ஸ்ட்ராகளையும் மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக சம்பந்தப்பட்ட நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |