பிரான்சில் இரத்த வெள்ளத்தில் கிடந்த பிரித்தானிய பெண் விவகாரம்: நீதிமன்றத்தின் முடிவு
பிரான்சில் உயிரிழந்த பிரித்தானியப் பெண் வழக்கில், நீதிமன்றம் கொலை வழக்கு பதிவு செய்துள்ளது.
பிரித்தானிய பெண்ணுக்கு நேர்ந்த பயங்கர முடிவு
கடந்த மாத இறுதியில், பிரான்சிலுள்ள Tremolat என்னும் கிராமத்தில் வாழ்ந்துவந்த Karen Carter (65) என்னும் பிரித்தானியப் பெண், தனது காரின் அருகே படுகாயமடைந்து இரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
அவர், மார்பு, கைகள், கால்கள் மற்றும் இடுப்பில் கூர்மையான ஒரு ஆயுதத்தால் கடுமையாக தாக்கப்பட்டிருந்தார்.
அவசர உதவிக் குழுவினர் அவரைக் காப்பாற்ற முயன்றும் அவரைக் காப்பாற்ற இயலவில்லை.
நீதிமன்றத்தின் முடிவு
Karen எப்படி உயிரிழந்தார் என்பது குறித்து ஊடகங்களில் பல்வேறு செய்திகள் வெளியான நிலையில், தற்போது நீதிபதி ஒருவர் முறைப்படி கொலை வழக்கு தொடர்பில் விசாரணை துவக்க உத்தரவிட்டுள்ளார்.
அதாவது, Karen கொலை செய்யப்பட்டதாக சந்தேகத்தின்பேரில் தற்போது விசாரணை துவக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |