ரஷ்யா பதற்றத்தின் மத்தியில் பிரான்ஸ் புதிய அணு ஏவுகணை சோதனை
France Tests New Nuclear Missile Amid Russia Tensions: அணு ஆயுதம் தாக்கும் திறன் கொண்ட புதிய ஏவுகணையை பிரான்ஸ் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை
பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்ததாவது, நாட்டின் புதிய தலைமுறை M51.3 நீர்மூழ்கிக் கப்பல் வழி ஏவப்படும் பாலிஸ்டிக் ஏவுகணை (Submarine-Launched Ballistic Missile) முதன்முறையாக சோதனை செய்யப்பட்டது.

இந்த சோதனை பிரிட்டனி கடற்கரை அருகே நடைபெற்றது. ஏவுகணையில் அணு வெடிகுண்டு பொருத்தப்படவில்லை. சர்வதேச ஒப்பந்தங்களுக்கு இணங்க, வெறும் சோதனைக்காக மட்டுமே ஏவப்பட்டது.
இந்த சோதனை, Le Vigilant என்ற அணு நீர்மூழ்கிக் கப்பலின் பராமரிப்பு பணிகள் முடிந்த பின், அதன் திறனை உறுதிப்படுத்தும் வகையில் நடத்தப்பட்டது.
சவுதி அரேபியாவுக்கு இராணுவப்படைகளை அனுப்பும் துருக்கி, பாகிஸ்தான் - செயல்படுத்தப்பட்ட மெக்கா பாதுகாப்பு கூட்டணி
பிரான்ஸ், தனது அணு தடுப்பு திறனை (Nuclear Deterrent) வலுப்படுத்தும் முயற்சியாக இதை முன்னெடுத்துள்ளது.
சோதனைக்கு பின், ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் சமூக வலைதளத்தில், “இன்று நாம் வலிமையானவர்களாக இருக்கிறோம். இந்த செய்தி எங்கு சென்று சேரவேண்டுமோ தெளிவாக அனுப்பப்பட்டுள்ளது” என்று பதிவிட்டார்.
அவர், பிரான்ஸ் தனது அணு ஆயுதங்களை விரிவுபடுத்தும் திட்டத்தை முன்பே அறிவித்திருந்தார். மேலும், ஐரோப்பிய கூட்டாளிகளுடன் இணைந்து அணு பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகளை மேற்கொள்ளும் திட்டத்தையும் முன்வைத்துள்ளார்.
இந்த சோதனை, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மேற்கத்திய நாடுகளை எச்சரித்த சில நாட்களுக்குப் பிறகு நடந்தது. புடின், “கலினின்கிராட் மீது அச்சுறுத்தல் ஏற்பட்டால், ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்தும்” என்று எச்சரித்திருந்தார்.
பிரான்ஸ் தற்போது 5.6 பில்லியன் யூரோ (சுமார் $6 பில்லியன்) செலவில் தனது 290 அணு ஆயுதங்களை பராமரித்து வருகிறது. இது உலகின் நான்காவது பெரிய அணு ஆயுத களஞ்சியம் ஆகும். அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிடம் 5,000-க்கும் மேற்பட்ட அணு ஆயுதங்கள் உள்ளன.
இந்த சோதனை, பிரான்ஸ் தனது பாதுகாப்பு மற்றும் மதிப்புகளை காக்கும் உறுதியை உலகிற்கு வெளிப்படுத்தும் முக்கியமான செய்தியாகக் கருதப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |