ரஷ்ய படைகளை உங்கள் மண்ணிலிருந்து வெளியேற்றுங்கள்! பிரபல ஐரோப்பிய நாட்டிற்கு பிரான்ஸ் வலியுறுத்தல்
பெலாரஸ் மண்ணிலிருந்து ரஷ்ய படைகளை வெளியேற்றுமாறு அந்நாட்டு ஜனாதிபதி Lukashenko-யிடம் பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் கேட்டுக் கொண்டுள்ளார்.
உக்ரைன் மீது தொடர்ந்து 4வது நாளாக தாக்குதல் நடத்திய வரும் ரஷ்யா, ஐரோப்பியாவில் உள்ள அதன் நட்பு நாடான பெலாரஸிலிருந்தும் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், சனிக்கிழமை பெலாரஸ் ஜனாதிபதி Lukashenko உடன் தொலைபேசியில் பேசிய பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன், பெலாரஸில் உள்ள ரஷ்ய படைகளை வெளியேற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், உங்கள் முடிவின் தீவிரத்தால், பெலாரஸ் மண்ணில் அணு ஆயுதங்களை நிலைநிறுத்த ரஷ்யாவை அங்கீகரிக்கும் என Lukashenko-யிடம் மக்ரோன் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் ட்விட்டரில் பதிவிட்டதாவது, இன்று மாலை, அவரது மண்ணிலிருந்து ரஷ்ய படைகளை வெளியேற்றுமாறு பெலாரஸ் ஜனாதிபதி Lukashenko-யிடம் கேட்டுக்கொண்டேன்.
Ce soir, j'ai demandé au Président Loukachenko le retrait des troupes russes de son sol. La fraternité entre les peuples biélorusses et ukrainiens devrait conduire la Biélorussie à refuser d'être le vassal et le complice de fait de la Russie dans la guerre contre l'Ukraine.
— Emmanuel Macron (@EmmanuelMacron) February 27, 2022
பெலாரஷ்ய மற்றும் உக்ரேனிய மக்களுக்கு இடையேயான சகோதரத்துவம், உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவின் அடிமையாகவும் மற்றும் நடைமுறை உடந்தையாகவும் இருக்க பெலாரஸை மறுப்பதற்கு வழிவகுக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.