அதிக குறைந்தபட்ச ஊதியம் வழங்கும் நாடுகள் பட்டியலில் பிரான்ஸ்
அதிக அளவில் குறைந்தபட்ச ஊதியம் வழங்கும் நாடுகளில் பிரான்சும் இடம்பெற்றுள்ளது.
அதிக குறைந்தபட்ச ஊதியம் வழங்கும் நாடுகள்
உலகிலேயே அதிக அளவில் குறைந்தபட்ச ஊதியம் வழங்கும் நாடுகள் பட்டியலில் உயர்ந்த இடத்தில் இருக்கும் நாடுகள், Luxembourg, அந்நாட்டின் குறைந்தபட்ச ஊதியம், 2,296 யூரோக்கள், நெதர்லாந்து, (அந்நாட்டின் குறைந்தபட்ச ஊதியம், 2,257 யூரோக்கள்).

அயர்லாந்தின் குறைந்தபட்ச ஊதியம் 2,034 யூரோக்கள், பெல்ஜியம் நாட்டின் குறைந்தபட்ச ஊதியம் 1,959 யூரோக்கள், ஜேர்மனியின் குறைந்தபட்ச ஊதியம் 1,538 யூரோக்கள், ஸ்பெயின் நாட்டின் குறைந்தபட்ச ஊதியம் 1,198 யூரோக்கள்
பிரான்ஸ் வழங்கும் குறைந்தபட்ச ஊதியம், 2025 நவம்பர் நிலவரப்படி, 1,426. 30 யூரோக்கள்.
குறைந்த அளவில் குறைந்தபட்ச ஊதியம் வழங்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடு பல்கேரியா. அந்நாட்டின் குறைந்தபட்ச ஊதியம் 427 யூரோக்கள்!
பிரித்தானியாவில் வழங்கப்படும் குறைந்தபட்ச ஊதியம், 2022 யூரோக்கள்.
இந்நிலையில், வரும் ஆண்டில், அதாவது, 2026இல் பிரான்ஸ் தனது குறைந்தபட்ச ஊதியத்தை 20 யூரோக்கள் அதிகரிக்க உள்ளது. அதாவது, பிரான்சின் குறைந்தபட்ச ஊதியம் 2026இல் சுமார் 1,446 யூரோக்களாக இருக்கும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |