பிரான்சில் திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வரும் புதிய விதி!
பிரான்ஸ் அரசாங்கத்தின் கொரோனா தடுப்பூசி திட்டத்தை நிபந்தனைகளுடன் நாட்டின் அரசியலமைப்பு சபை அங்கீகரித்துள்ளது.
அரசியலனைப்பு சபை அங்கீகரித்த நிலையில், திங்கள்கிழமை முதல் கொரோனா தடுப்பூசி பாஸை பிரான்ஸ் அறிமுகப்படுத்துகிறது.
உணவகங்கள் மற்றும் திரையரங்குகள் போன்ற பொது இடங்களுக்குள் நுழைய 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
அரசியல் கூட்டங்களில் கலந்து கொள்ள தடுப்பூசி பாஸ் தேவையில்லை என நிபந்தனை அளிக்கப்பட்டுள்ளது.
தேவையில்லாத பட்சத்தில் உடனே தடுப்பூசி பாஸ் திட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என நாட்டின் அரசியலமைப்பு சபை உத்தரவிட்டுள்ளது.
தற்போது வரை பிரான்சில் தடுப்பூசி போடாதவர்கள் கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என்ற பரிசோதனை முடிவை காட்டி பொது இடங்களுக்குள் நுழையலாம் என்பது குறிப்பிடத்தக்கது .