இந்திய கடற்படையின் நீர்மூழ்கி கப்பல் திட்டங்களுக்கு தொழில்நுட்பம் வழங்கும் பிரான்ஸ்.., அதன் சிறப்புகள்
இந்திய கடற்படையின் நீர்மூழ்கி கப்பல் திட்டங்களுக்கு அதிநவீன பம்ப்ஜெட் உந்துவிசை தொழில்நுட்பத்தை (pumpjet propulsion technology) பிரான்ஸ் வழங்கவுள்ளது.
தொழில்நுட்பம் வழங்கும் பிரான்ஸ்
இந்திய கடற்படையின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியில், நீர்மூழ்கிக் கப்பல் திட்டங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இந்நிலையில், இந்திய கடற்படையின் நீர்மூழ்கி கப்பல் திட்டங்களுக்கு அதிநவீன பம்ப்ஜெட் உந்துவிசை தொழில்நுட்பத்தை (pumpjet propulsion technology) பிரான்ஸ் வழங்கவுள்ளது.
இந்திய கடற்படையை விரிவாக்கம் செய்வதற்காக திட்டம் 66 மற்றும் திட்டம் 77 என அழைக்கப்படும் அடுத்த தலைமுறை டீசல்-மின்சார தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு ஒரு மேம்பட்ட பம்ப்ஜெட் உந்துவிசை தொழில்நுட்பம் பிரான்ஸால் வழங்கப்பட்டுள்ளது.
‘திட்டம் 66’ என்ற பெயரில் 66 போர்க் கப்பல்களை கட்டவும், ‘திட்டம் 77’ என்ற பெயரில் அணுசக்தியில் இயங்கக்கூடிய நீர்மூழ்கி கப்பலை வங்கவும் கடற்படை திட்டமிட்டுள்ளது.
பாரம்பரிய ப்ரொப்பல்லர் அமைப்புகளுக்கு ஒரு அதிநவீன மாற்றாக பம்ப்செட் உந்துவிசை தொழில்நுட்பம் உள்ளது. இந்த தொழில்நுட்பமானது பிரெஞ்சு பாராகுடா-வகுப்பு நீர்மூழ்கிக் கப்பலில் ஏற்கனவே செயல்பட்டு வருகிறது.
இந்த தொழில்நுட்பமானது நீர்மூழ்கிக் கப்பல்களின் ஒலியின் அளவை கணிசமாக குறைக்கிறது. இதன்மூலம் கப்பலின் அமைதியான மற்றும் எதிரிகளின் கவனத்தை ஈர்க்காமல் செயல்படும் திறன் அதிகரிக்கும்.
இதனால், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ள நீர்மூழ்கிகள் மிகவும் சப்தமற்றவையாக மாறும்.
இதனால், எதிரிகளுக்கு நமது இருப்பிடத்தை அறிய முடியாது. இந்த அதிநவீன தொழில்நுட்பமானது நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு மேம்பட்ட சூழ்ச்சித்திறனை வழங்கும். மேலும் நீருக்கடியிலான போர் திறனை அதிகரிக்க வழிவகுக்கும்.
இந்த தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வது இந்திய கப்பற்படையின் செயல்பாட்டுத் திறனுக்கு உதவும். இது இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் ஒரு வலிமைமிக்க சக்தியாக மாறும்.
இந்தியாவிற்கு இந்த மேம்பட்ட தொழில்நுட்பத்தை வழங்குவதற்கான பிரான்ஸ் விருப்பம் தெரிவிப்பது இரு நாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் பாதுகாப்பு உறவுகளை குறிக்கிறது.
மேலும் வான், கடல் மற்றும் தரைவழி கூட்டு ராணுவ பயிற்சிகளை இரு நாட்டு ராணுவமும் மேற்கொண்டு வருகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |