ரஷ்யாவிடமிருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா
இந்தியாவுக்கு அதிக அளவு கச்சா எண்ணெயை சப்ளை செய்து வரும் நாடாக ரஷ்யா உருவாகியுள்ளது என்று இந்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கூறியுள்ளார்.
கச்சா எண்ணெய் சப்ளை
இந்திய தலைநகர் டெல்லியில் எப்ஐபிஐ (FIPI) ஆயில் அன்ட் கேஸ் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, "கடந்த 2 ஆண்டுகளில் இந்தியாவிற்கு அதிகளவில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யும் நாடாக ரஷ்யா மாறியுள்ளது.
2022 பிப்ரவரி முதல் வெறும் 0.2 சதவீதத்திலிருந்து அதிகரித்து சமீபத்திய மாதங்கள் வரை முதலிடத்தைப் பிடித்துள்ளது. தற்போதைய கணக்குப்படி இந்தியாவுக்கு அதிக அளவு கச்சா எண்ணெயை விநியோகம் செய்வது ரஷ்யா தான்.
இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் 35 சதவிகிதம் ரஷ்யாவிடம் இருந்து பெறப்படுகிறது. ஆனால் இது மாதத்திற்கு மாதம் மாறுபடும்.
இந்தியா, கச்சா எண்ணெய்யை ரஷ்யாவிடம் இருந்து வாங்காமல் இருந்தால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலை 200 டொலரை தாண்டிருக்கும்.
இதனால், உலக பொருளாதாரத்தில் பெரும் தாக்கம் ஏற்பட்டிருக்கும். இந்தியாவின் இந்த முடிவால் தான் சர்வதேச கச்சா எண்ணெய் விலையின் ஏற்றம் தடுக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஈராக், குவைத், அமெரிக்கா ஆகிய நாடுகளும் இந்தியாவிற்கு, கச்சா எண்ணெயை விநியோகம் செய்கின்றன" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |