நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு குறித்து வெளிப்படையாக பேசிய சீமான்
நடிகர் ரஜினிகாந்தை சீமான் சந்தித்தது பெரும் விவாதமாக மாறிய நிலையில், நேற்று பொதுக்கூட்டம் ஒன்றில் சீமான் பேசியுள்ளார்.
சீமான் பேசியது
சில தினங்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிகர் ரஜினியை சந்தித்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
மாப்பிள்ளைக்கு ரூ.1.2 லட்சம் மாத சம்பளம் இருந்தும் அரசு வேலை இல்லாததால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்
இந்நிலையில் நேற்று பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய சீமான், "நானும் நடிகர் ரஜினிகாந்தும் இரண்டே கால் மணி நேரம் பேசினோம். நாங்கள் என்ன பேசினோம் என்று எங்களுக்கு மட்டும் தான் தெரியும்.
அதனை உங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவருக்கும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
உங்களது வீட்டில் காதுகுத்து, கல்யாணம், புத்தகம் வெளியீடு என அனைத்திற்கும் ரஜினிகாந்தை அழைக்கிறீர்கள். ஆனால், நான் ஒரே ஒருமுறை மட்டும் தான் சந்தித்தேன்.
அதற்கு ஐயோ ஐயோ என்று குதிக்கிறார்கள். இதற்கு காரணம் என்னவென்றால், அவர் திரையுலகின் சூப்பர் ஸ்டார், நான் அரசியலில் சூப்பர் ஸ்டார். நாங்கள் இருவரும் சந்தித்ததும் பயந்து விட்டார்கள்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |