பாலஸ்தீன நாட்டை அங்கீகரிக்கும் பிரான்ஸ்: அமெரிக்கா, இஸ்ரேல் கடும் கண்டனம்
பாலஸ்தீன நாட்டை அங்கீகரிக்கும் பிரான்ஸின் முடிவுக்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பாலஸ்தீன நாட்டை அங்கீகரிக்கும் பிரான்ஸ்
உலக இராஜதந்திர அரங்கில் ஒரு குறிப்பிடத்தக்க நகர்வாக, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் நேற்று இரவு ஓர் அறிவிப்பை வெளியிட்டார்.
அதன்படி, வரும் செப்டம்பர் மாதம் பாலஸ்தீன நாட்டை பிரான்ஸ் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கும் என்று அவர் தெரிவித்தார்.
இந்த அறிவிப்பு மத்திய கிழக்கு மோதலில் ஈடுபட்டுள்ள முக்கிய தரப்பினரிடையே கலவையான மற்றும் தீவிரமான எதிர்வினைகளைத் தூண்டியுள்ளது.
பிரான்சின் இந்த முடிவை பாலஸ்தீன அதிகாரிகள் வரவேற்றுள்ளனர். இது சர்வதேச அங்கீகாரத்திற்கும், அரசு உருவாக்கத்திற்கும் ஒரு முக்கியமான படி என்று அவர்கள் கருதுகின்றனர்.
ஜனாதிபதி க்ரோன் தனது முடிவை நியாயப்படுத்திப் பேசுகையில், அமைதி சாத்தியமானது என்பதை நிரூபிக்க ஒரு கூட்டுப் பொறுப்பு உள்ளது என்பதை வலியுறுத்தினார்.
காசாவில் நடைபெற்று வரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், அங்குள்ள மக்களுக்கு அவசரமாகத் தேவைப்படும் நிவாரணத்தை வழங்குவதற்கும் உடனடி கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்கா, இஸ்ரேல் கண்டனம்
பிரான்ஸின் இந்த அறிவிப்புக்கு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்த நடவடிக்கையை கடுமையாகக் கண்டித்துள்ளார். இது "பயங்கரவாதத்திற்கு வெகுமதி அளிக்கும்" செயல் என்று அவர் சாடியுள்ளார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மார்கோ ரூபியோவும் பிரான்ஸின் முடிவை "அலட்சியமானது" என்று குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |