லண்டனில் மோடிக்கு “டீ பார்ட்டி” வழங்கிய இந்திய வம்சாவளி தொழிலதிபர்: யார் இந்த அகில் படேல்?
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அண்மைய பிரித்தானிய சுற்றுப்பயணம் இருநாடுகளுக்கு இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
லண்டனில் மோடிக்கு தேநீர் விருந்து
செக்கர்ஸ் மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பின் முக்கிய நிகழ்வாக "சாய் பே சர்ச்சா" (தேநீர் மீதான கலந்துரையாடல்) அமைந்தது.
இதில், பிரித்தானியாவை சேர்ந்த இந்திய வம்சாவளி தொழில் முனைவோர் மற்றும் "அமலா சாய்" தேநீர் நிறுவனத்தின் நிறுவனர் அகில் படேல் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரித்தானியா பிரதமர் ர் ஸ்டார்மருக்கு பரிமாறிய தேநீர் நிகழ்வாகும்.
இந்த நிகழ்வு குறித்த இரண்டு புகைப்படங்களை பிரதமர் மோடி தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஒரு படத்தில் அவர் தேநீர் கோப்பையுடன் காட்சியளிக்க, மற்றொரு படத்தில் அகில் படேல் தேநீர் பரிமாறுவது படமாக்கப்பட்டுள்ளது.
"'சாய் பே சர்ச்சா' வித் பிரதமர் கீர் ஸ்டார்மர் அட் செக்கர்ஸ்... பிரெவிங் ஸ்ட்ராங்கர் இந்தியா-யு.கே டைஸ்!" என்று மோடி அந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
பிரதமர் மோடியுடன் அகில் படேல் உரையாடும் ஒரு காணொலியும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில், அகில் படேல் பிரதமருக்கு சூடான தேநீரைப் பரிமாறும் போது, "ஒரு சாய்வாலாவிலிருந்து மற்றொரு சாய்வாலாவிற்கு" என்று நகைச்சுவையாக குறிப்பிட்டது பலரையும் கவர்ந்துள்ளது.
‘Chai Pe Charcha’ with PM Keir Starmer at Chequers...brewing stronger India-UK ties! @Keir_Starmer pic.twitter.com/sY1OZFa6gL
— Narendra Modi (@narendramodi) July 24, 2025
யார் இந்த அகில் படேல்?
அகில் படேலின் "அமலா சாய்" நிறுவனத்தை நிறுவிய பயணம் சுவாரஸ்யமானது. அவரது லிங்க்ட்இன் சுயவிவரத்தின்படி, அவர் லண்டனில் உள்ள ஹாம்ப்ஸ்டெட்டில் உள்ள யுனிவர்சிட்டி காலேஜ் பள்ளியில் தனது கல்வியைத் தொடங்கினார்.
பின்னர், லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் அண்ட் பொலிட்டிக்கல் சயின்ஸ் (LSE) நிறுவனத்தில் மேலாண்மையில் இளங்கலை அறிவியல் (BSc) பட்டம் பெற்றார்.
பட்டப்படிப்பை முடித்த பிறகு, பல்வேறு நிறுவனங்களில் பயிற்சி பெற்று, தரவு ஆய்வாளராகப் பணிபுரிந்தார்.
பின்னர், 2019 ல், அவரது பாட்டியின் உத்வேகத்தால், தனது தொழில் பாதையை மாற்றிக்கொண்டு, தேநீர் உலகில் அடியெடுத்து வைத்து "அமலா சாய்" நிறுவனத்தைத் தொடங்கினார்.
"அமலா சாய்" நிறுவனம், தனது இந்திய தேயிலை மற்றும் மசாலாப் பொருட்களை "அசாம் மற்றும் கேரளாவில் உள்ள சிறு குடும்பப் பண்ணைகளில்" இருந்து நேரடியாகப் பெறுவதாக, நிறுவனத்தின் லிங்க்ட்இன் பக்கம் தெரிவிக்கிறது.
தரமான மற்றும் நெறிமுறை சார்ந்த மூலப்பொருட்களைப் பயன்படுத்துவதற்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பு சமீபத்தில் அங்கீகரிக்கப்பட்டது.
மே மாதம், பிரித்தானிய அருங்காட்சியகம், அமலா சாய் நிறுவனம் இந்தியாவில் இருந்து பொருட்களைப் பெறும் முறையைக் காட்டும் ஒரு காணொலியை வெளியிட்டது.
Chai Pe Charcha☕🫖_ From One Chaiwala to Another (The Global Leader) #chaipecharcha #UnitedKingdom pic.twitter.com/jc346PFMpz
— VenuGopal Goud Vemula 🇮🇳🚩 (@venugoud4bjp) July 25, 2025
என்ன ஒரு அருமையான நாள்!
அகில் படேல் தனது தனிப்பட்ட சமூக ஊடகங்களில் எதையும் பதிவிடவில்லை என்றாலும், அவரது நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு காணொலியைப் பகிர்ந்தார்.
அந்தக் காணொலியின் தலைப்பு, "வெறும் ஒரு சாதாரண வியாழக்கிழமை @narendramodi @keirstarmer அவர்களுக்கு சாய் பரிமாறியது. என்ன ஒரு அருமையான நாள்! அளவுகடந்த பெருமை. அடுத்த வாரம் முழு கதையையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வோம், எனவே காத்திருங்கள்!" என்று குறிப்பிட்டிருந்தது.
அந்தக் காணொலியில், இரண்டு உலகத் தலைவர்களும் அகில் படேல் பரிமாறிய தேநீரை ரசிப்பது பதிவாகியுள்ளது. இது இந்த இளம் தொழில்முனைவோருக்கும் அவரது நிறுவனத்திற்கும் ஒரு மறக்க முடியாத நாளாக அமைந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |