ஸ்பெயினுக்குள் ஆயிரக்கணக்கான புலம்பெயர்வோர் நுழைந்த விவகாரம்: பரபரப்பாகும் பிரான்ஸ்
ஸ்பெயின் நாட்டுக்குள் பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்வோர் நுழையும் காட்சிகள் அதைச் சுற்றியுள்ள நாடுகளில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளன.
பரபரப்பாகும் பிரான்ஸ்
ஸ்பெயின் நாட்டுக்குள் பல்லாயிரக்கணக்கான மொராக்கோ நாட்டவர்களான புலம்பெயர்வோர் நுழைந்துள்ள விடயத்தால், அதைச் சுற்றியுள்ள நாடுகள் பரபரப்பாகியுள்ளன.

இத்தாலி பிரதமர் ஸ்பெயினை ஷெங்கன் மண்டத்திலிருந்தே நீக்கவேண்டும் என அறிக்கை விட, மொராக்கோ நாட்டவர்களான புலம்பெயர்வோர் தங்கள் நாடுகளுக்குள் நுழைந்துவிடாமல் தடுப்பதற்காக ஸ்பெயினைச் சுற்றியுள்ள நாடுகள் தீவிர நடவடிக்கைகளில் இறங்கிவருகின்றன.
பிரான்சைப் பொருத்தவரை, ஸ்பெயினை ஒட்டியுள்ள நாடுகளில் அதுவும் ஒன்று. ஆகவே, பிரான்ஸ் ஸ்பெயின் எல்லையில் கட்டுப்பாடுகளை வலுப்படுத்த உள்ளது அந்நாடு.

இது குறித்து பிரான்ஸ் உள்துறை அமைச்சரான லாரென்ட் (Laurent Nuñez) கூறும்போது, சியூட்டாவில் நிலவும் நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஸ்பெயின் எல்லையில் கட்டுப்பாடுகளை உடனடியாக வலுப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |