உக்ரைனுக்காக 1200 AASM Hammer ஸ்மார்ட் குண்டுகளை தயாரிக்கும் பிரான்ஸ்
உலகத்தின் முன்னணி பாதுகாப்பு தொழில்நுட்ப நாடுகளில் ஒன்றான பிரான்ஸ், உக்ரைனுக்கு ஆதரவாக 2025-ம் ஆண்டில் 1,200 AASM Hammer ஸ்மார்ட் குண்டுகளை தயாரிக்கவுள்ளது.
இது கடந்த 2024-ல் தயாரிக்கப்பட்ட 830 குண்டுகளுடன் ஒப்பிடும் போது கணிசமான அதிகரிப்பு என Le Parisien செய்தியிலுள்ளது.
இந்த AASM Hammer (Armement Air-Sol Modulaire) ஒரு உயர்தர guidance kit மற்றும் power unit kit மூலம் தயாரிக்கப்படும் மற்றும் இயல்பான குண்டுகளுக்கு பொருத்தக்கூடியது.
Safran நிறுவனம் தயாரிக்கும் இந்த குண்டுகள் ரஷ்யாவின் GPS இடையூறு முயற்சிகளை தவிர்த்து இலக்குகளை மிகத் துல்லியமாக தாக்கும் திறனைக் கொண்டுள்ளது.
இப்பொது, இந்த ஹாமர் குண்டுகள் உக்ரைனின் MiG மற்றும் Su போர் விமானங்களில் ஏற்றுவதற்கும் ஏற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இது Rafale விமானங்களுக்காக முதன்முதலில் உருவாக்கப்பட்டாலும், இப்போது Mirage, F-16 உள்ளிட்ட பல விமானங்களில் பயன்படுத்தப்படுகிறது.
Jean-Noël Mahier, Safran நிறுவன இயக்குநர், இந்த குண்டுகள் தானாகவே தங்கள் நிலை மற்றும் வேகத்தை கணித்து இலக்கை தவறாமல் தாக்கும் திறன் கொண்டவை என்கிறார்.
உயர் துல்லியமும், GPS இடையூறுகளுக்கு எதிரான செயல்திறனும் இந்த பாம்களை உக்ரைனுக்கு மிக முக்கியமான ஆயுதமாக மாற்றியுள்ளது. தற்போது பிரான்ஸ் மாதம் 50 ஹாமர் குண்டுகளை உக்ரைனுக்கு அனுப்புவதாக உறுதிப்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Keywords: AASM Hammer bombs Ukraine, France AASM Hammer smart bombs for Ukraine, France smart bombs 2025, Ukraine airstrike weapons, Safran AASM production, GPS-resistant smart bombs, Ukraine MiG Su compatibility, French defense support Ukraine, AASM Hammer bomb range, Modular air-to-ground weapon, Precision guided bomb Ukraine