கப்பலில் பயணிக்கும் வெளிநாட்டவர்களுக்கு புதிய வரி: பிரான்ஸ் திட்டம்
பிரான்சில் ஆடம்பர கப்பல்களில் பயணிக்கும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு புதிய வரி ஒன்றை விதிக்கும் திட்டத்துக்கு ஆதரவாக பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் மேலவை வாக்களித்துள்ளது.
வெளிநாட்டவர்களுக்கு புதிய வரி
இந்த வரி விதிப்பு தொடர்பான மசோதாவை செனேட்டரான Jean-Marc Delia என்பவர் முன்வைத்துள்ளார்.

’Polluter pays’ (pollueur-payeur) என்னும் சுற்றுச்சுழல் கொள்கையின்படி இந்த வரி விதிக்கப்பட உள்ளது. அதாவது, ஐரோப்பிய கப்பல் பயணங்களால் ஆண்டுதோறும் 7 மில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடு வெளியாவதாக கணக்கிடப்பட்டுள்ளது.
ஆக, காற்று மாசுவை ஏற்படுத்துபவர்கள்தான் அதற்கான செலவையும், அதை தடுப்பதற்கான செலவையும் ஏற்கவேண்டுமேயொழிய, மாசுபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் அதற்காக செலவு செய்யக்கூடாது என்பதுதான் ’Polluter pays’ கொள்கை.

ஆகவே, அந்த கொள்கையை மேற்கோள் காட்டி, ஆடம்பரக் கப்பல்களில் பயணிக்கும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு ஒரு பயணத்துக்கு ஆளுக்கு 15 யூரோக்கள் வரி விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதனால், ஆண்டொன்றிற்கு 75 மில்லியன் யூரோக்கள் வருவாய் வரும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |