சர்ச்சைக்குரிய இரண்டு தடுப்பூசிகளையுமே பயன்படுத்த பிரான்ஸ் முடிவு
சர்ச்சைக்குரிய தடுப்பூசிகளாக இருந்தாலும், திட்டமிட்டபடியே ஆஸ்ட்ராசெனகா மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன தடுப்பூசிகளை பயன்படுத்துவது என பிரான்ஸ் முடிவு செய்துள்ளது.
ஆஸ்ட்ராசெனகா மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன தயாரிப்பான கொரோனா தடுப்பூசிகளை தொடர்ந்து 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்துவது என பிரான்ஸ் முடிவு செய்துள்ளதாக, பிரான்ஸ் அரசு செய்தித்தொடர்பாளரான Gabriel Attal தெரிவித்துள்ளார்.
சில நாடுகள் இந்த இரண்டு நிறுவன தடுப்பூசிகளையுமே பயன்படுத்துவதை நிறுத்தியுள்ள நிலையில், சமீபத்தில்தான் டென்மார்க் இரத்தக்கட்டி பிரச்சினை ஏற்படுவதால் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி பயன்பாட்டை நிறுத்துவதாக அறிவித்திருந்தது.
இப்படிப்பட்ட ஒரு சூழலில், இரத்தக்கட்டிகள் உருவாகுவதாக செய்திகள்
வந்துகொண்டிருக்கும் நிலையிலும், ஆஸ்ட்ராசெனகா மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன்
நிறுவன தடுப்பூசிகளை தொடர்ந்து பயன்படுத்துவது என பிரான்ஸ் முடிவுசெய்துள்ளது
குறிப்பிடத்தக்கது.