செப்டம்பர் 18... பிரான்ஸ் போக்குவரத்து அமைப்புகள் பிரம்மாண்ட வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு
பிரான்ஸ் போக்குவரத்து அமைப்புகளும் தொழிலாளர் யூனியன்களும் செப்டம்பர் 18ஆம் திகதி பிரம்மாண்ட வேலைநிறுத்தம் ஒன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளன.
வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு
RATP என்னும் போக்குவரத்து யூனியன்களும், SNCF என்னும் ரயில்வே அமைப்பும் செப்டம்பர் 18 அன்று வேலைநிறுத்தத்துக்கு அழைப்புவிடுத்துள்ளதால், பாரீஸ் மற்று அதைச் சுற்றியுள்ள பகுதிகள் கடுமையாக பாதிக்கப்படலாம் என கருதப்படுகிறது.
போக்குவரத்துத்துறை அமைச்சரான Philippe Tabarot, செப்டம்பர் 18 வேலைநிறுத்தம் பிரம்மாண்டமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், அது ஒரு கருப்பு தினமாக அமையலாம் என அஞ்சுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொதுப்போக்குவரத்து சேவைகளைக் குறைத்தல், பொது விடுமுறைகளை ஒழித்தல், மருத்துவச் செலவுகளுக்கான நிதியைக் குறைத்தல் மற்றும் அரசு உதவிகள் நிறுத்தம் ஆகிய விடயங்களுக்கு எதிராக இந்த வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |