பிரான்சில் நிலவும் குழப்பம்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயண ஆலோசனை
பிரான்சில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், பிரான்சுக்குச் செல்லும் தத்தம் நாட்டவர்களுக்கு சில நாடுகள் பயண ஆலோசனைகளை வெளியிட்டுள்ளன.
பிரான்சில் நிலவும் குழப்பம்...
பிரான்சில் நிலவும் அரசியல் சூழலுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.
80,000க்கும் அதிகமான பொலிசாரும் துணை ராணுவப்படையினரும் குவிக்கப்பட்டுள்ளார்கள்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் சாலைகளில் ஏற்படுத்தியுள்ள தடைகளை அவர்கள் அப்புறப்படுத்திவரும் நிலையில், பாரீஸில் மட்டுமே 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
சுற்றுலாப்பயணிகளுக்கு பயண ஆலோசனை
இந்நிலையில், பிரான்சுக்கு பயணிப்போருக்கு சில நாடுகள் பயண ஆலோசனை வழங்கியுள்ளன.
பிரான்சில் ஆர்ப்பாட்டங்களும் வேலைநிறுத்தங்களும் நடைபெற உள்ளதால் இடையூறுகள் ஏற்படலாம் என பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் தனது நாட்டு மக்களுக்கு தனது பயண ஆலோசனையில் தெரிவித்துள்ளது.
கனடா அரசு, கனேடியர்கள் தாங்கள் திட்டமிட்டுள்ள இடங்களுக்குச் செல்ல நன்கு திட்டமிட்டு செயல்படுமாறு கேட்டுக்கொண்டுள்ளதுடன், பயணத்திட்டங்களுக்கு இடையூறை ஏற்படுத்தக்கூடிய வேலைநிறுத்தங்கள் குறித்து உள்ளூர் ஊடகங்கள் மூலம் அறிந்துகொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |