One in, one out ஒப்பந்தத்தில் மாற்றம்: பிரித்தானிய பிரான்ஸ் அமைச்சர்கள் முடிவு
One in, one out ஒப்பந்தத்தில் மாற்றம் ஒன்றைச் செய்ய பிரித்தானிய மற்றும் பிரான்ஸ் உள்துறை அமைச்சர்கள் முடிவு செய்துள்ளனர்.
One in, one out ஒப்பந்தம்...
பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் ஆங்கிலக்கால்வாய் வழியாக சிறுபடகுகள் மூலம் நுழைந்த புகலிடக்கோரிக்கையாளர்களை பிரான்சுக்கே திருப்பி அனுப்பும் வகையில் One in, one out என்னும் ஒப்பந்தத்தில் பிரித்தானியாவும் பிரான்சும் கையெழுத்திட்டுள்ளன.
அப்படி பிரான்ஸ் ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொரு புகலிடக்கோரிக்கையாளருக்கும் பதிலாக, பிரான்சிலிருந்து வரும் ஒரு புலம்பெயர்வோருக்கு பிரித்தானியா புகலிடம் அளிக்கும்.

ஒப்பந்தத்தில் மாற்றம் விடயம் என்னவென்றால், அந்த ஒப்பந்தத்தின் கீழ் பிரித்தானியா பிரான்சுக்கு திருப்பி அனுப்பும் சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் மீண்டும் லொறிகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழைந்துவருவது தெரியவந்துள்ளது.
அதாவது, One in, one out திட்டத்தின் கீழ் பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்பட்டவர்களைத் தேடிக்கண்டுபிடிக்கும் ஆட்கடத்தல்காரர்கள், அவர்களை மிரட்டி, தங்களுடன் இணைந்து வேலை செய்யும்படி கட்டாயப்படுத்துவதாக, மீண்டும் பிரித்தானியா வந்துள்ள சிலர் தெரிவித்துள்ளார்கள்.
ஆகவே, அவர்கள் மீண்டும் பிரித்தானியாவுக்கே சட்டவிரோதமாக லொறிகள் மூலம் திரும்புவதுடன், தலைமறைவாகவும் வாழ்ந்துவருவதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.
ஆகவே, பிரித்தானிய உள்துறைச் செயலரான ஷபானா மஹ்மூத், பிரான்ஸ் உள்துறை அமைச்சரான லாரண்டிடம் (Laurent Nuñez) ஒப்பந்தத்தில் ஒரு மாற்றத்தை இணைக்க கோரிக்கை விடுக்க, அதற்கு லாரண்டும் சம்மதித்துள்ளார்.

அதாவது, பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் ஆங்கிலக்கால்வாய் வழியாக சிறுபடகுகள் மூலம் நுழைந்த புகலிடக்கோரிக்கையாளர்களை பிரான்சுக்கே திருப்பி அனுப்பும் வகையில் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டிருந்த நிலையில், தற்போது, சிறுபடகுகள் மூலம் மட்டுமல்ல, எந்த வகையில் பிரித்தானியாவுக்குள் நுழைந்தாலும் புகலிடக்கோரிக்கையாளர்களை பிரான்சுக்கே திருப்பி அனுப்பும் வகையில் ஒப்பந்தத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |